Published:Updated:

சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு!

சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு!
சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு!

நாட்டின் முன்னேற்றம் என்பது கல்வியின் அடிப்படையில்தான் அமையும். அதுதான் மக்களின் மன நிலையாகவும் இருந்துவருகிறது. கல்வியில் தங்கள் குழந்தைகள் முன்னேற்றம் இருக்க வேண்டும் என பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலமனு ஒன்றை பாபு அப்துல்லா என்பவர் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்தான் கடந்த 2010-ல் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்காததால் நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியாமல் போனது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமலில் இருந்தால் நீட் போன்ற அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெறுவர். கேரளாவில் அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமே பின்பற்றப்படுகிறது. அம்மாநில மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் வெற்றிபெற்றுள்ளனர். எனவே, தமிழகத்திலிருக்கும் அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிபுணர்கள் குழு, மனுதாரரின் கருத்தையும் பரிசீலித்து கேரளா, கர்நாடக மாநிலத்தில் உள்ளதைப்போல் சி.பி.எஸ். இ. பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.