Published:Updated:

கேண்டீனை இடம் மாற்றம் செய்யவேண்டும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கேண்டீனை இடம் மாற்றம் செய்யவேண்டும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
கேண்டீனை இடம் மாற்றம் செய்யவேண்டும்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மதுரை முழுவதும் பல இடங்களில் சுகாதாரமற்ற  நிலையில் கேன்டீன்கள், தள்ளுவண்டிக்கடைகளும் செயல்பட்டுவருகின்றன. இதில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆக்கிரமிப்புடன் கூடிய கடைகளும் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இயங்கிவந்த கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த பின்னர், அங்குள்ள வியாபாரிகள் விதிகளை பின்பற்றினர். ஆனால், நாளடைவில் விதிகள் மீண்டும் மீறப்பட்டன.

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விதிமீறி செயல்பட்டுவரும் தனியார் கேன்டீன்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மதுரை மக்கள் கண்காணிப்பாளர் செயல் இயக்குநர் ஹென்றி திபென் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயங்கி வரும் தனியார் கேன்டீன்களில், ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையிலும், தொடர்ந்து இயங்கி வருகிறது. மேலும்,  தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் ஆக்சிஜன் பைப் லைன் செல்லும் பகுதிக்கு மிக அருகில், எவ்வித தீத்தடுப்பு நடவடிக்கையுமின்றி கேன்டீன் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அந்த கேன்டீன்களை  இடமாற்றம்  செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் உணவகத்தை இடமாற்றம் செய்ய ஆறு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வருக்கு உத்தரவிட்டனர்.