Published:Updated:

சட்டம் உன் கையில்!

சொத்துக்களும்... சொந்தங்களும் !

சுதா ராமலிங்கம்
ஓவியம்: பாரதிராஜா

பிரபாவின் பத்து வருட திருமண வாழ்க்கை, 'நோபல்’ கவிஞன் 'பாப்லோ நெருடா'வின் காதல் கவிதைகளைப் போல் இனிமையாக ஓடிக் கொண்டிருந்தது... குழந்தை இல்லை என்கிற ஒற்றைக் குறையைத் தவிர. ஆனால், காலதேவன் பிரபாவுக்குச் சீக்கிரமே ஒரு பேரிடியைக் கொடுத்தான். பிரைவேட் கம்பெனியில் உயர்பதவியில் இருந்த கணவன், 36 வயதில் 'ஹார்ட் அட்டாக்’கில் மரணத்தைத் தழுவ, 31 வயதில் வாழ்க்கை இருண்டது பிரபாவுக்கு.

சட்டம் உன் கையில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

கண்முன் நீண்டிருக்கும் மீதமுள்ள வாழ்க்கையை எடுத்துச் செல்ல ஒரு குழந்தையும் இல்லை என்பதால், தன் பிறப்பே அர்த்தமற்றதாகி விட்டதாக உணர்ந்தார். தனிமை தரும் பாரத்தைத் தாங்க முடியாமல் துவண்டார்; துடித்தார்; அழுதார்; அரற்றினார். அப்படி இருந் தும் தனிமை எதன் பொருட்டும் கரைந்ததாகத் தெரியவில்லை; கொஞ்சமும் தேயவில்லை.

தனிமைத் துயருக்குள்ளேயே மூழ்கி விடக்கூடாது என்பதற்காக, பிடித்தமான ஆசிரியை வேலைக்குச் சென்றார். தேவைக்கும் அதிகமாகவே சம்பளம் கிடைக்க... சேமிக்க ஆரம்பித்தவர், ஃப்ளாட்ஸ் வாங்கினார்... நகைகள் வாங்கினார். கணவரின் இறப்புக்குப் பின், அவருடைய அலுவலகத்தில் இருந்து வந்த பணம், இன்ஷூரன்ஸ் பணம் என்று பிரபாவின் சொத்து மதிப்பு அதிகமானது.

'நீண்டநாள் தனிமையில் கழிக்க முடியாது' என்று உணர்ந்தவருக்கு, 'இரண்டாம் திருமணம்' பற்றிய எண்ணம் துளிர்விட, தேடலில் இறங்கினார். ஆனால், முதல் கணவரின் உடன் பிறந்த சகோதரருக்கு, பிரபாவின் இந்த முடிவு அதிர்ச்சியைச் தந்தது. காரணம்... தன் சகோதரனின் சொத்து மற்றும் பிரபா சம்பாதித்து வாங்கியிருக்கும் சொத்து என்று மொத்தமாக பெருகியிருந்த சொத்துக்கள்தான். அவையெல்லாம் வேற்று மனிதருக்குச் செல்வதை அவர் விரும்பவில்லை.

தன் மனைவி, குழந்தைகள் சகிதம் வந்து பிரபாவிடம் அன்பாகப் பேசினர். ''நாங்க உன்  னைக் கண்ணுக்கு கண்ணா பாத்துக்கிறோம். எங்க குழந்தைகள் எல்லாம் உன் குழந்தைங்க மாதிரி இல்ல... உன் குழந்தைங்களேதான். எங்களை எல்லாம் விட்டுட்டு நீ வேற குடும்பத்துக்குப் போனா நல்லாவா இருக்கும்?!'' என்று அங்கலாய்த்த அவர்களின் வார்த்தைகளை நம்பினார் பிரபா.

ஐந்தாறு வருடங்கள் மச்சினர் குடும்பமும், அவரின் வளர்ந்த குழந்தைகளும் தன் மேல் பொழிந்த அன்பில் உருகினார் பிரபா. தனக்கு ஒன்று என்றால், அந்தக் குடும்பம் காட்டும் அன்பும் அரவணைப்பும் அவரை நெகிழ வைத்தது. ஆறு வருடங்கள் கழித்து, தன் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் மச்சினர் வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு நிஜ முகத்தைக் காட்டினார் மச்சினர். அதுவரை அன்பால் நனைத்துக் கொண்டிருந்த அந்தக் குடும்பம்... அருவருப்பான வார்த்தைகளால் தினம் தினம் பிரபாவைத் தீயாகத் தீண்டியது. சாப்பாடுகூடக் கொடுக்காமல் சித்ரவதை செய்ய ஆரம்பித்தது. உச்சக்கட்டமாக வீட்டை விட்டே துரத்தியது.

இந்தக் கொடுமைகளோடு... பிரபாவுக்கு வெரிகோஸ் நோயும் வந்து சேர, அவரால் வகுப்பில் அதிக நேரம் நின்று பாடம் எடுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் வேலையை விட்டார். வேலையும் இல்லாமல், சம்பாத்தித்த சொத்தும் இல்லாமல் தவித்தவர், கடைசியாக நீதிமன்ற படியேறினார். ஆறேழு வருடங்கள் இடைவிடாது போராடி, தன்னுடைய சொத்துக்களில் தனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டி, அவற்றை மீண்டும் தனதாக்கிக் கொண்டார் பிரபா.

சொத்துப் பிரச்னைதான் என்றில்லை. விதம்விதமான பிரச்னைகளுக்காக பற்பலராலும் ஏமாற்றப்பட்டு, ஒவ்வொரு நீதிமன்றமாக அலைந்து திரியும் பெண்களின் எண்ணிக்கை இங்கே அதிகம். இதுபோன்ற வலைகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

அடுத்த இதழுடன் நிறைவடைகிறது