Published:Updated:

`உத்தவ் அணி எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது!' - சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சுப்ரீம் கோர்ட்

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்-மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்று மகாராஷ்டிரா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

`உத்தவ் அணி எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது!' - சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்-மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்று மகாராஷ்டிரா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
சுப்ரீம் கோர்ட்

மகாராஷ்டிராவில் இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் சிவசேனா இரண்டாக உடைந்தது. சிவசேனாவில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 சிவசேனா எம்.எல்.ஏ-க்களுடன் தனி அணியாக சென்று பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அதிக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதால், அவரது அணியை சட்டமன்ற சபாநாயகர் நர்வேகர் உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்திருக்கிறார். இதனால் ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை கோரிய போது உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து அவர்கள்மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு கொறடா கோகாவாலா சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். உத்தவ் தாக்கரே அணியும் ஏக்நாத் ஷிண்டே அணியில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏ-க்கள் 15 பேர்மீது நடவடிக்கை எடுக்க துணை சபாநாயகரிடம் ஏற்கெனவே மனுக்கொடுத்திருந்தது. அந்த மனு நிலுவையில் இருக்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைத்தது சட்டவிரோதம் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் ராகுல் நர்வேகர்
சபாநாயகர் ராகுல் நர்வேகர்

ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இன்று உத்தவ் தாக்கரே தரப்பு மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. உத்தவ் தாக்கரே தரப்பில் கபில் சிபல் தலைமையிலான வழக்கறிஞர்கள் தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தனர். வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் கோர்ட் முடிவு செய்யும் வரை எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் இது போன்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்தபோது அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததையும் கபில் சிபல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், `ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம், கட்சித் தாவல் தொடர்பான மனுக்கள்மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று சபாநாயகரிடம் தெரிவித்துவிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அது பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்' என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்தப் பிரச்னையிலிருந்து உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.க்கள் தப்பித்திருக்கின்றனர்.