Published:Updated:

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ரூ. 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ரூ. 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு செலுத்த வந்தாக கூறி திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதையடுத்து மீண்டும், அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் ஒரு வழக்கில் கைது ஜெயக்குமார் செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் மட்டும் ஜெயகுமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் முன்னதாக சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையரகத்தில், 5 கோடி மதிப்புடைய தொழிற்சாலையை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் மகள், மருமகன் மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த நிலையில் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமாருக்கு மாஜிஸ்திரேட் வைஷ்ணவி மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism