Published:Updated:

திருமணத்துக்குச் சில நாள்களே இருக்கையில் நந்தினி கைது ஏன்? - அஜிதா, வளர்மதி ஆதங்கம்!

சமூக ஊடகத்தில், மதுரை நந்தினியை விடுதலை செய்யக்கோரி ஹேஷ்டேக்குடன் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து சிலரிடம் பேசினோம்.

மது விலக்கு எனும் கோரிக்கையோடு பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர் மதுரையைச் சேர்ந்த நந்தினி. இதற்காகப் பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். பல வழக்குகளும் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் 2014-ம் ஆண்டு டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய வழக்கில், நந்தினியும் அவரின் தந்தையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது நந்தினி, ஐபிசி 328ன் படி, போதைப் பொருள் விற்பது குற்றம்தானே? என்று நீதிபதியிடம் விவாதித்தார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஜூலை 5-ம் தேதி, நந்தினிக்குத் திருமணமாகும் நிலையில் சிறைத் தண்டனைக்குள்ளானது பல இடங்களில் விவாதப் பொருளானது. சமூக ஊடகத்தில் நந்தினியை விடுதலை செய்யக்கோரி ஹேஷ்டேக்குடன் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து சிலரிடம் பேசினோம்.

அஜிதா
அஜிதா
விகடன்
அருந்ததிராய் ஒருமுறை, 'இந்த நீதி மன்றங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே வேலை செய்யும்; ஏழைக்களுக்கு இல்லை" என்று பேசியிருந்தார். அதை நீதிமன்றத்தில் அழைத்துக்கேட்டபோது, 'ஆமாம். அப்படித்தான் பேசினேன்' என்றதும் ஒருநாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கறிஞர் அஜிதா

வழக்கறிஞர் அஜிதா

``நீதிமன்ற அவமதிப்புகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன. நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமல் செய்யப்படும் செயல்கள் ஒரு பிரிவு. அடுத்தது, நீதிமன்றப் பணிகள் அல்லது நீதிபதியின் பணிகள் நடைபெற விடாமல் குறுக்கிடும் முயற்சிகள். இவற்றில் இரண்டாம் பிரிவில்தான் நந்தினி சிறைப்பட்டிருக்கிறார். அவர் மீதான வழக்கு விசாரணையில், 'மது முக்கியமான உணவா... விற்பனை செய்துதான் ஆகவேண்டுமா... இதற்குச் சட்டம் அனுமதிக்கிறதா?' என்று கேட்கிறார் என்றால், அது நீதிபதிக்கு எதிராக நேருக்கு நேரான விவாதமாக மாறிவிடுகிறது. அதாவது நீதிபதியிடமே அந்தக் கேள்வியைக் கேட்பதாகி விடுகிறது. அதனால், இந்தப் பிரிவு நீதிமன்ற அவமதிப்பு மிகுந்த கவனத்துக்குள்ளாகி விடுகிறது.

அதாவது நந்தினியின் போராட்டம், கேள்விகள், எதிர்ப்புகள் ஒட்டுமொத்த சமூகம், அரசு சார்ந்தது எனில் அது வேறு விதமாகவும் நீதிமன்றத்தை நோக்கி எனும்போது வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கறிஞர் அஜிதா

அதாவது நந்தினியின் போராட்டம், கேள்விகள், எதிர்ப்புகள் ஒட்டுமொத்த சமூகம், அரசு சார்ந்தது எனில் அது வேறு விதமாகவும் நீதிமன்றத்தை நோக்கி எனும்போது வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது. அங்கு நடந்தவை பற்றி முழுமையாக விவரங்கள் தெரியவில்லை. பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் நடப்பவை. இந்த வழக்கு மேல்முறையீட்டுக்குப் போகும் போது நந்தினியை வருத்தம் அல்லது மன்னிப்பு கேட்கச் சொல்லச் சொன்னால், அவர் மறுப்பார்... அப்போது என்ன நடக்குமெனச் சொல்ல இயலாது! அருந்ததிராய் ஒருமுறை, 'இந்த நீதிமன்றங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே வேலை செய்யும்; ஏழைகளுக்கு இல்லை" என்று பேசியிருந்தார். அதை நீதிமன்றத்தில் அழைத்துக்கேட்டபோது, 'ஆமாம். அப்படித்தான் பேசினேன்' என்றதும் ஒருநாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்படிச் செயல்பட்டார்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நந்தினிக்கு இன்னும் சில நாள்களில் திருமணம் என்றிருக்கையில் கைது, சிறை என்பது வருத்தமாக இருக்கிறது" என்கிறார் அஜிதா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி

"நீதிமன்ற அவதிப்பு என்று நந்தினியைக் கைது செய்திருக்கிறார்கள். அப்படி அவர் என்னதான் கேட்டார்? மது போதைப் பொருளா... உணவுப் பொருளா என்றுதானே? சரி.. இதற்கு வழக்குப் போட்டு பிணை கொடுங்கள் என்றுகேட்கும்போதும், 'இதற்கு மேல், இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டேன் என்று எழுதிக்கேட்கின்றனராம்! இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?

வளர்மதி
வளர்மதி
விகடன்

ஒரு நபரின் கருத்தை நிச்சயமாக நீதிமன்றத்தில் சொல்லலாம். அதுவும் நந்தினி வழக்கறிஞரும்கூட. உண்மையில் இந்தக் கேள்வி அந்த நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கில் கேட்டது இல்லையே! இந்தச் சமூகத்தின் மீதான அக்கறையில் வந்ததுதானே? கோயம்புத்தூர் டாக்டர் ரமேஷின் மனைவி எதனால் இறந்தார். மது அருந்திவிட்டு வந்தவர்களால்தானே?

இன்னொரு பக்கம் பார்த்தால், ஹைகோர்ட்டாவது டேஷ்வாவது எனக் கேட்பவர்களும் பெண்களை அவமதிப்புடன் பேசியவர்கள் எல்லாம் அதிகாரத்தின் துணையுடன் சுதந்திரமாகப் போகையில் நந்தினிக்கு மட்டுமா சிறைத்தண்டனையா? அதுவும் நந்தினியின் திருமணத்திற்கு ஒருவாரம்கூட இல்லாத நிலையில் எனும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை? சமூக ஆர்வலர்களுக்கு திருமணம் என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், போராட்டக் களத்தில் நிற்பவர்களில் கருத்துகளோடு ஒத்த சிந்தனையுடையவர்கள், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது திருமணம் செய்துகொள்பவரையு பாதிக்கும் என்று தெரிந்தும் முன்வருபவர்கள் குறைவு. நந்தினிக்கும் அப்படியான மனிதர் கிடைத்து, இருவரும் வாழ்க்கையில் சேரும் நிலையில் இந்தச் சிறைத்தண்டனை கொடுமை.

நந்தினி
நந்தினி
விகடன்
நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற 37 எம்.பிகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு ஏன் மதுரை எம்.பி நந்தினிக்காக ஓர் அறிக்கையாவது விட்டிருக்கலாமே?
வளர்மதி

நந்தினி போராட்ட வடிவங்களில் பலருக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால், மது ஒழிப்பு எனும் நந்தினியின் நோக்கத்தில் யாரும் மாறுபட முடியாது. அதனால், இன்றைக்கு ஜனநாயக, சமூக இயக்கங்கள் நந்தினிக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், யதார்த்ததில் அமைப்புகளை விடவும் தனி மனிதர்கள்தான் நந்தினி விடுதலைக்காகப் பேசி வருகிறார்கள்.

Vikatan

முற்போக்கு இயக்கங்களும் முன்வர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற 37 எம்.பிகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு ஏன் மதுரை எம்.பி நந்தினிக்காக ஓர் அறிக்கையாவது விட்டிருக்கலாமே... இதைக் குறையாகச் சொல்வதாக நினைக்க வேண்டாம். இனியாவது நந்தினிக்கான வலுவான குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்" என்கிறார் வளர்மதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு