Published:Updated:

`தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும்!’ - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை உயர்நீதி மன்றம்

தமிழ்நாடு முழுவதுமுள்ள, மதுபானக் கடைகளுடன் இணைந்த அனைத்து பார்களையும் ஆறு மாதங்களில் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களைச் சேகரிக்க புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பார் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி சரவணன் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.

டாஸ்மாக் பார்
டாஸ்மாக் பார்

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன், `டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை மட்டுமே விற்க அனுமதிக்க முடியும். பார்களை இணைத்து நடத்தச் சட்டத்தில் இடமில்லை. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மட்டும் விற்க அனுமதி உள்ளது. இதற்கு மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism