Published:Updated:

``திருமணமாகாத பெண்களும் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு!'' - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

``திருமணமாகாத பெண்களும் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு" என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:

``திருமணமாகாத பெண்களும் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு!'' - உச்ச நீதிமன்றம்

``திருமணமாகாத பெண்களும் சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு" என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

திருமணமாகாத பெண்களின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ``பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய அனைத்துப் பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.

கருக்கலைப்பு
கருக்கலைப்பு

இந்த உரிமையை மருத்துவக் கருவறுதல் சட்டம் 1971 (MTP) அனுமதிக்கிறது. இந்தக் கருக்கலைப்பு சட்டவிரோதமாகாது. மேலும், சட்டத்தின்படி திருமணமான பெண்கள், கணவரை இழந்த பெண்கள் தங்களின் 24 வாரகாலக் கருவைக் கலைக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும் சில சமயங்களில் திருமண உறவுகளில் வலுக்கட்டாயமாக பெண்கள் உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கிறார்கள். வலுக்கட்டாயமாக கருத்தரித்த பெண்களை அதிலிருந்து காப்பாற்ற இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு உரிமையைப் பொறுத்தவரை திருமணமானவர், திருமணமாகாதவர் என்ற வேறுபாடு கிடையாது. உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். கருக்கலைப்பு செய்ய அனைத்துப் பெண்களும் தகுதி உடையவர்கள்'' எனத் தெரிவித்திருக்கிறது.