Published:Updated:

``பேச்சு சுதந்திரம் பிரதமருக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்வதற்கல்ல..!" - அலகாபாத் உயர் நீதிமன்றம்

பிரதமர் மோடி - அலகாபாத் உயர் நீதிமன்றம்

``அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமான பேச்சு சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் இந்த உரிமை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு வழங்கப்படாது." - அலகாபாத் உயர் நீதிமன்றம்

``பேச்சு சுதந்திரம் பிரதமருக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்வதற்கல்ல..!" - அலகாபாத் உயர் நீதிமன்றம்

``அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமான பேச்சு சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் இந்த உரிமை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு வழங்கப்படாது." - அலகாபாத் உயர் நீதிமன்றம்

Published:Updated:
பிரதமர் மோடி - அலகாபாத் உயர் நீதிமன்றம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாக 2020-ம் ஆண்டு ஜான்பூரைச் சேர்ந்த மும்தாஜ் மன்சூரி என்பவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதை எதிர்த்து மும்தாஜ் மன்சூரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அஸ்வனி குமார், மிஸ்ரா, ராஜேந்திர குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ``அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமான பேச்சு சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது, ஆனால், இந்த உரிமை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு வழங்கப்படாது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்த நாட்டின் அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தாலும், பிரதமர் அல்லது இந்திய அரசாங்கத்தின் மற்ற அமைச்சர்களைத் துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது அவதூறான கருத்துகளை வெளியிடவோ அந்த உரிமை பொருந்தாது. அதனால், எப்.ஐ.ஆர் ரத்து செய்ய வேண்டி தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரிட் மனுவில் தலையிட எங்களால் முடியாது. இந்த விவகாரத்தில் சட்டத்தின்படி நடவடிக்கை தொடரவும், விசாரணையை விரைவில் முடிக்கவும் அதிகாரிகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்" எனத் தீர்ப்பளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலிஸ்
போலிஸ்

அதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்மீது ஐ.பி.சி பிரிவு 504 (அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது அனுப்புதல் ஆகியவற்றுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.