Published:Updated:

கங்கனா ரணாவத்: `அடுத்தமுறை ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட்!’ - மும்பை நீதிமன்றம் எச்சரிக்கை

கங்கனாவின் மருத்துவச் சான்றிதழை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.ஆர்.கான் இந்த முறை கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிப்பதாகவும், அடுத்த முறை ஆஜராகவில்லையெனில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒரு டி.வி நேர்காணலின்போது பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து தெரிவித்த கருத்துகள் ஜாவேத் அக்தரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கின்றன என்று கூறி கடந்த நவம்பர் மாதம் மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஜாவேத் அக்தர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். `கங்கனாவின் நேர்காணல் தனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்விதமாக இருக்கிறது’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கங்கனா மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட்டது.

பிப்ரவரி மாதத்திலிருந்து கங்கனா கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கங்கனா கோர்ட்டில் ஆஜராகவில்லை. அந்தேரி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நடைபெற்ற அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 9-ம் தேதி கங்கனாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து கங்கனா விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோதும் கங்கனா கோர்ட்டில் ஆஜராகவில்லை. கங்கனா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கங்கனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவச் சான்றிதழை தாக்கல் செய்தார். படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார். உடனே அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பிப்ரவரி மாதத்திலிருந்து கங்கனா ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கோர்ட்டில் ஆஜராக மறுத்துவருகிறார்’ எனத் தெரிவித்தார்.

"மக்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்!"- `தலைவி' கங்கனா ரணாவத்

கங்கனாவின் மருத்துவச் சான்றிதழை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.ஆர்.கான், இந்த முறை கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிப்பதாகவும், அடுத்த முறை ஆஜராகவில்லையெனில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்து அடுத்தகட்ட விசாரணையை வரும் 20-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு