Published:Updated:

இந்தியாவின் மிக இளம் வயது நீதிபதி இவர்தான்!

மயங்க் பிரதாப் சிங் தன் குடும்பத்தினருடன்
மயங்க் பிரதாப் சிங் தன் குடும்பத்தினருடன்

ராஜஸ்தான் மாநில நீதித்துறை தேர்வுகளை (Rajasthan Judicial Services (RJS) ) 21 வயதில் வென்றுள்ளார் மயங்க் பிரதாப் சிங்.

நாட்டிலேயே முதன்முறையாக 21 வயதில் நீதிபதியாக தேர்வு பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், மயங்க் பிரதாப் சிங். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி முடித்தார். சட்டத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர், 2018-ம் ஆண்டு நீதித்துறை பணி Rajasthan Judicial Services (RJS) தேர்வை எழுதினார். இந்தத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகின. அந்தத் தேர்வில் வெற்றிபெற்று நாட்டின் இளம் நீதிபதி என்னும் புகழ் பெற்றுள்ளார். விரைவில் பதவி ஏற்கவும் உள்ளார்.

மயங்க் பிரதாப் சிங்
மயங்க் பிரதாப் சிங்

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு மயங்க் பிரதாப் சிங் அளித்த பேட்டியில், ``சமூகத்தில் நீதிபதிகளுக்கு மிகப்பெரிய மரியாதையும் முக்கியத்துவமும் உள்ளது. இதனால் சிறுவயதிலிருந்தே எனக்கு நீதிபதி ஆக வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உண்டானது. எனவேதான் சட்டப்படிப்பைத் தேர்வுசெய்து படித்தேன்.

தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருப்பது, ரொம்பவும் மகிழ்ச்சியாக உ ள்ளது. என் பெற்றோர், ஆசிரியர்கள் என நான் வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி’’ எனப் பெருமிதம் பொங்கக் கூறினார் மயங்க்.

நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது. இதை ராஜஸ்தான் அரசாங்கம் இந்த ஆண்டு முதல் 21 வயதாகக் குறைத்தது. இதன் மூலம் தனக்கு நிறைய கற்றுக்கொள்ளவும் நீதி துறையில் சேவை செய்யவும் காலமும் வாய்ப்பும் கிடைத்திருப்பதாக மயங்க் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு