Election bannerElection banner
Published:Updated:

`க்ளைமாக்ஸ்' நோக்கி அயோத்தி... `யோகிக்கு எப்படித் தெரியும்?'

அயோத்தி
அயோத்தி

27 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்? அது ராமர் பிறந்த இடம் என்று கோருபவர்களுக்கா அல்லது பாபர் மசூதிக்குச் சொந்தமான இடம் என்று கோருபவர்களுக்காக என்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கான நேரம் வந்துவிட்டது.

பி.ஜே.பி மற்றும் இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்த கரசேவகர்களின் கைங்கர்யத்தில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6 தேதியன்று நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, இன்று வரையிலும் இந்தியாவை ஒருவித திகிலிலேயே வைத்துள்ளது. குறிப்பாக, அந்தச் சம்பவத்தன்றும் அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், மும்பை, டெல்லி, கோவை, ஹைதராபாத் எனத் தொடர்ந்த தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு நகர மக்கள், இன்றும்கூட ஒருவித அச்ச உணர்வோடுதான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டுள்ளனர்.

அயோத்தி
அயோத்தி

27 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்? அது ராமர் பிறந்த இடம் என்று கோருபவர்களுக்கா அல்லது பாபர் மசூதிக்குச் சொந்தமான இடம் என்று கோருபவர்களுக்காக என்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கான நேரம் வந்துவிட்டது. நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தே, அயோத்தி மற்றும் கலவர பூமியாகக் கருதப்படும் இந்தியாவின் பல்வேறு நகரங்களும் காவல்துறையின் கழுகுப் பார்வைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, அயோத்தியில் டிசம்பர் 10-ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும், அனுமதியின்றி பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களெல்லாம், பழைய நினைவுகளைக் கிளற ஆரம்பித்திருக்கும் சூழலில், 'தீபாவளித் திருநாளில் சர்ச்சைக்குரிய இடத்தில் 5,100 அகல்விளக்குகள் ஏற்றப்படும்' என்று விஷ்வ இந்துப் பரிஷத் அறிவித்திருப்பது பதைபதைப்பைக் கூட்டியுள்ளது. முழுக்க காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையின் கட்டுப்பாட்டுக்குள் அயோத்தி கொண்டுவரப்பட்டுள்ளதால், பதற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டேவருகிறது. மொத்த உலகமும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.

அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி
அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி

"நிலம் யாருக்குச் சொந்தம்? என்பதான வழக்கு இது. இதில், 'நம்பிக்கை' என்றரீதியான வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்" என்கிறார், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா. தமிழக பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனோ, "அந்த இடத்தில் ராமர் ஆலயம் இருந்துள்ளது என்ற தொல்லியல் துறையின் ஆதாரங்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். ராமர் ஆலயம் கட்டுவதற்கு ஏதுவாக சாதகமான தீர்ப்பு வரும் என்றும் நம்புகிறேன்" என்கிறார் உறுதியாக.

'சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், `நல்ல செய்தி காத்திருக்கிறது' என்று அயோத்தி வழக்கைக் குறிப்பிட்டுச் சொன்னார். மேலும், `உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிப்பார்கள்' என்றும் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், 'உச்ச நீதிமன்றம் என்ன முடிவுசெய்யும் என்பது முதல்வருக்கு எப்படித் தெரியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

> பாபர் மசூதி இடிப்பு... அயோத்தி வழக்குப் பின்னணியுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வை முன்வைத்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள சிறப்புக் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா... அடுத்தது அயோத்தி! http://bit.ly/33N5QKz

அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே!

சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு