Published:Updated:

பில்கிஸ் பானு வழக்கு: 11 பேர் விடுதலையை எதிர்த்து தாக்கலான சீராய்வு மனு... உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

உச்ச நீதிமன்றம்

குஜராத்தில் பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

Published:Updated:

பில்கிஸ் பானு வழக்கு: 11 பேர் விடுதலையை எதிர்த்து தாக்கலான சீராய்வு மனு... உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

உச்ச நீதிமன்றம்

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அவரின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் 11 பேருக்கு 2008-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. பின்னர், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத் தண்டனை முடிவதற்கு முன்பாக விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்

முன்னதாக இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தன்னைச் சிறைத் தண்டனை முடியும் முன்பே விடுவிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குற்றத்தின் வழக்கு விசாரணை மும்பையில் நடந்திருந்தாலும், குற்றம் குஜராத்தில்தான் நடந்திருக்கிறது. எனவே, வழக்கில் விசாரணை முடிந்து தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, குற்றவாளியின் தண்டனையை குறைப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், மனுதாரரின் மனு மீது இரண்டு மாதங்களில் முடிவு செய்யும்படி மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில்தான் குஜராத் அரசு 11 பேரையும் ஆகஸ்ட் 15-ம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்தது. ஏற்கெனவே 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதாலும், நன்னடத்தை காரணமாகவும் அவர்களை விடுதலை செய்வதாகவும், இதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருப்பதாகவும் குஜராத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.