Published:Updated:

பில்கிஸ் பானு வழக்கு, மீண்டும் விலகிய நீதிபதி பெலா; சட்ட நடைமுறை என்ன?

பெலா திரிபாதி

``பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகளின் நன்னடத்தை கேள்விக்குறியாக இருக்கும்பட்சத்தில், அவர்களின் நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு விடுவிக்கப்பட்டார்கள் என குஜராத் அரசு சொல்லுவது சரியல்ல.’’

பில்கிஸ் பானு வழக்கு, மீண்டும் விலகிய நீதிபதி பெலா; சட்ட நடைமுறை என்ன?

``பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகளின் நன்னடத்தை கேள்விக்குறியாக இருக்கும்பட்சத்தில், அவர்களின் நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு விடுவிக்கப்பட்டார்கள் என குஜராத் அரசு சொல்லுவது சரியல்ல.’’

Published:Updated:
பெலா திரிபாதி

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட, பில்கிஸ் பானுவின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொண்ட பெண் நீதிபதி பெலா எம் திரிவேதி, 11 பேர் விடுதலைக்கு எதிரான பிற பொது நலவழக்குகள் விசாரணையின் போதும் தம்மை விடுவித்துக் கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு

2002 மார்ச் 3 அன்று, குஜராத் கலவரத்தின்போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, அவரின் அம்மா, இன்னொரு பெண் என மூன்று பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். பில்கிஸ் பானுவின் மூன்று வயது குழந்தை உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தங்களது அரசியல் பலத்தைப் பயன்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. 2008-ம் ஆண்டு மும்பை விசாரணை நீதிமன்றம், பாலியல் வன்புணர்வு மற்றும் கொலையால், 11 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து, வாழ்நாள் சிறைத்தண்டனையை விதித்தது.

குற்றவாளிகளில் ஒருவர், 15 வருடங்கள் சிறையில் இருந்ததால், தண்டனைக்காலம் முடிவடையும் முன்பே தன்னை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடினார். கடந்த 13.05.2022 அன்று, 1992 ரிமிஷன் கொள்கையைப் பயன்படுத்தி, இரு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி 2022 ஆகஸ்ட் 15 அன்று குஜராத் அரசு, 11 குற்றவாளிகளை விடுவித்தது. வெளிவந்த பாலியல் கொலை குற்றவாளிகளை ஆரத்தி எடுத்து வரவேற்றது மக்கள் மத்தியில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. குற்றவாளிகள் பரோலில் வெளிவந்தபோது, அவர்கள் மீது வேறு சில வழக்குகளும் பதியப்பட்டன.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள்
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள்

இந்நிலையில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டிசம்பர் 2022-ல் பில்கிஸ் பானு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அப்போது விசாரணை அமர்வில் இருந்த நீதிபதி பெலா எம் திரிவேதி, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இதனிடையே, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சி.பி.எம் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, முன்னாள் ஐ.பி.எஸ் மீரன் சதா போர்வான்கர் மற்றும் பல்வேறு உரிமைகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கு, கடந்த 04.01.2023 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அஜய் ரஸ்டோகியுடன் அமர்வில் இருந்த நீதிபதி பெலா எம் திரிவேதி, பில்கிஸ் பானு வழக்கு பொதுநல மனு மீதான விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாகக் கூறி விலகிக் கொண்டார்.

வழக்கு விசாரணையின்போது குஜராத் அரசு, 11 குற்றவாளிகள் 14 வருட சிறைத்தண்டனையை முடித்ததாலும், நன்னடத்தை காரணமாகவும், மத்திய அரசின் அனுமதிக்கு பின்னரே விடுவிக்கப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வழக்கின் குற்றவாளி மிதேஷ் சிம்மன்லால் பட் என்பவர், பரோலில் வெளிவந்திருந்தபோது பெண்கள் மீதான பாலியல் சீண்டல் வழக்கில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. ரமேஷ் சந்தனா என்னும் குற்றவாளி பரோலில் வெளியே சென்று, உரிய நேரத்தில் சிறைக்கு திரும்பாததினால் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது. நாஜுபாய் சோனி, ஜஸ்வந்த் ஐ உள்ளிட்ட 9 குற்றவாளிகளும் இதேபோல் பரோலில் வெளிவந்து உரிய நேரத்தில் சிறைக்குத் திரும்பவில்லை. இது, குற்றவாளிகள் நன்னடத்தை காரணமாக வெளிவிடப்பட்டனர் என நீதிமன்றத்தில் குஜராத் அரசு கூறியதற்கு முரணானது.

மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் | சென்னை உயர் நீதிமன்றம்
மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் | சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விஜயகுமாரிடம் பேசினோம்.  ``பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகளின் நன்னடத்தை கேள்விக்குறியாக இருக்கும்பட்சத்தில், அவர்களின் நன்னடத்தையைக் கணக்கில் கொண்டு விடுவிக்கப்பட்டார்கள் என குஜராத் அரசு சொல்லுவது சரியல்ல.

பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிவில் சமூகத்தினரால் பதியப்பட்ட பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வந்திருப்பது நல்ல விஷயம். பொதுவாக, நீதி செலுத்தப்படுகிறது என்பதை அனைவரும் அறியும்படி, நீதி செலுத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படை நீதிக்கோட்பாட்டின்படியே, ஒரு நீதிபதி வழக்கின் அமர்விலிருந்து விலகுவார். நீதிபதி பெலா, சம்பந்தப்பட்ட இந்த வழக்குகளில் இருந்து விலகியிருப்பது நீதியின் பொருட்டே என்று சொல்லலாம்.  பொதுநல வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், சட்டம் அறிந்தவர்களாகவும், மனசாட்சி உள்ளவர்களாகவும், முக்கியமாக சமூக அக்கறை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்” எனக் கருத்து தெரிவித்தார்.

- நிலவுமொழி செந்தாமரை