Published:Updated:

பில்கிஸ் பானு வழக்கு: 11 பேரை விடுவித்ததை எதிர்த்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிய பெண் நீதிபதி!

பேலா திரிபாதி

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து, சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி விலகிக்கொண்டார்.

Published:Updated:

பில்கிஸ் பானு வழக்கு: 11 பேரை விடுவித்ததை எதிர்த்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிய பெண் நீதிபதி!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து, சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி விலகிக்கொண்டார்.

பேலா திரிபாதி

குஜராத்தை சேர்ந்த பில்கிஸ் பானு, கடந்த 2002-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட நிலையில் நன்னடத்தையை காரணம் காட்டி குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மத்திய அரசின் ஒப்புதலோடுதான் இம்முடிவை எடுத்திருப்பதாக குஜராத் அரசு தெரிவித்தது.

இவ்விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை, நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் பேலா திரிவேதி முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்விசாரணையில் இருந்து நீதிபதி பேலா விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்

இவ்வழக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதி, முதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை, இதற்கு முன்பு நீதிபதி ரமணா - நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வு, நீதிபதி அஜய் ரஸ்தோகி - நீதிபதி நாகரத்னா அமர்வு, நீதிபதி அஜய் ரஸ்தோகி- நீதிபதி ரவிக்குமார் அமர்வுகள் விசாரித்து உள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது குஜராத் அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த பிறகு மத்திய அரசின் ஒப்புதலோடு நன்னடத்தையின் அடிப்படையில் 11 பேரும் விடுவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது எப்படி?

தண்டனை பெற்றவர்களில் ஒருவர், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில், கடந்த மே மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, `குஜராத்தில்தான் குற்றம் நடந்துள்ளது. எனவே இவ்வழக்கு விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பது அல்லது முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது குஜராத் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது’ என்று கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இந்த உத்தரவை எதிர்த்தும் பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த உத்தரவை தொடர்ந்தே, பில்கிஸ் பானு வழக்கிலிருந்து குற்றவாளிகள் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்டனர்.

பில்கிஸ் பானுவிற்கு நடந்தது என்ன?

குஜராத்தில் கோத்ரா கலவரத்தின் போது 2002-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கலவரத்திற்கு பயந்து தப்பியோடிய பில்கிஸ் பானு, அவரின் தாயார், மேலும் 3 குடும்ப உறுப்பினர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இது தவிர பில்கிஸ் பானுவுடன் இருந்த 8 பேர் கொலை செய்யப்பட்டனர். 6 பேர் மாயமாகிவிட்டனர். பில்கிஸ் பானு உட்பட 3 பேர் மட்டுமே அதில் உயிர் தப்பினர். இந்த கொடூர சம்பவத்தின்போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். 3 மணி நேரம் மயங்கிக்கிடந்த அவர் மயக்கம் தெளிந்து ஆதிவாசிப் பெண்களிடம் ஆடை வாங்கி அணிந்து கொண்டு போலீஸில் சென்று புகார் செய்தார். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் தண்டனை பெற்ற 11 பேரும் அடங்குவர்.

இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இவ்வழக்கு மகாராஷ்டிராவில் நடந்தால் நியாயமாக இருக்காது என்று கருதி மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதில் 19 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.