Published:Updated:

மகாராஷ்டிரா: பாஜக எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சட்டவிரோதமானது -சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 12 பேரை அவையில் இருந்து ஓர் ஆண்டுகாலம் சஸ்பெண்ட் செய்து சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் சட்டவிரோதமானது என்று கூறி அதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா: பாஜக எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சட்டவிரோதமானது -சுப்ரீம் கோர்ட்

மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 12 பேரை அவையில் இருந்து ஓர் ஆண்டுகாலம் சஸ்பெண்ட் செய்து சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் சட்டவிரோதமானது என்று கூறி அதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
சுப்ரீம் கோர்ட்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மழைக்காலக்கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது, அவைத்தலைவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி 12 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலார், கிரிஷ் மகாஜனும் அடங்குவர். அவர்கள் தங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், அது பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து 12 எம்.எல்.ஏ-க்களும் தங்களது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த வாரம் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏ-க்களை ஓர் ஆண்டுகாலம் சஸ்பெண்ட் செய்திருப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா சட்டமன்றம்
மகாராஷ்டிரா சட்டமன்றம்

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ``எம்.எல்.ஏ-க்களை ஓர் ஆண்டுகாலம் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது. சட்டமன்றத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் போது, அந்த தொடர் முடியும் வரை மட்டுமே சஸ்பெண்ட் செய்ய முடியும்" என்று கூறி சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்துசெய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல், மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் சபாநாயகர் தேர்தலை நடத்த ஆளுநர் கொஷாரியா அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தற்போது சபாநாயகர் இல்லை. ஏற்கெனவே சபாநாயகராக இருந்த நானா பட்டோலே மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக்கொண்டதையடுத்து அந்தப் பதவி தொடர்ந்து காலியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism