Published:Updated:

சித்ரா ராமகிருஷ்ணா: ``அவங்களும் கைதிதான்..!" - வீட்டுச் சாப்பாட்டுக்கு `நோ' சொன்ன நீதிபதி

சித்ரா ராமகிருஷ்ணா

`சித்ரா ராமகிருஷ்ணா உயர் பதவி வகித்தவர் என்பதற்காக அவரை வி.ஐ.பி கைதியாகப் பார்க்க முடியாது’ என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

சித்ரா ராமகிருஷ்ணா: ``அவங்களும் கைதிதான்..!" - வீட்டுச் சாப்பாட்டுக்கு `நோ' சொன்ன நீதிபதி

`சித்ரா ராமகிருஷ்ணா உயர் பதவி வகித்தவர் என்பதற்காக அவரை வி.ஐ.பி கைதியாகப் பார்க்க முடியாது’ என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 2013 முதல் 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தார். அந்தக் காலகட்டத்தில், பல ஊழல்கள் தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்றுள்ளன. நிர்வாகம் சார்ந்த மிக முக்கியமான தகவல்களை `இமயமலை யோகி’ என்று சொல்லப்படும் ஒரு நபருக்கு மின்னஞ்சல் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்துவந்துள்ளார். இதையடுத்து அவர்மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. அதற்குப் பின்னர் சித்ரா கைதும் செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதேபோல, சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். இது குறித்துப் பேசிய நீதிபதி, ``அனைத்துக் கைதிகளும் சட்டத்தின் முன்பு சமம்தான். சித்ரா ராமகிருஷ்ணா உயர் பதவி வகித்தவர் என்பதற்காக அவரை வி.ஐ.பி கைதியாகப் பார்க்க முடியாது. சிறையிலுள்ள எல்லா கைதிகளும் அனுபவிக்கும் அதே வசதிகளைத்தான் அனுபவிக்க முடியும். வீட்டுச் சாப்பாடு சாப்பிட அனுமதிக்க முடியாது. பகவத்கீதை, ஹனுமான் சாலிசா ஆகிய புத்தகங்களைப் படிக்க அனுமதி அளிக்கப்படும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism