Published:Updated:

பண மதிப்பிழப்பு: ``பொருளாதார கொள்கை என்பதால் கைகளைக் கட்டிக்கொண்டிருக்க முடியாது" - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

``பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முடிவுக்குள் நீதிமன்றம் நுழையாது. ஆனால், அத்தகைய முடிவு எடுக்கப்பட்ட விதத்தை ஆய்வு செய்யலாம்." - உச்ச நீதிமன்றம்

பண மதிப்பிழப்பு: ``பொருளாதார கொள்கை என்பதால் கைகளைக் கட்டிக்கொண்டிருக்க முடியாது" - உச்ச நீதிமன்றம்

``பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முடிவுக்குள் நீதிமன்றம் நுழையாது. ஆனால், அத்தகைய முடிவு எடுக்கப்பட்ட விதத்தை ஆய்வு செய்யலாம்." - உச்ச நீதிமன்றம்

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாக, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி எந்தவொரு முன்னறிவிப்புமின்றி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் முடிவு மிகப்பெரிய தோல்வி என இன்றுவரை அரசியல் தலைவர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை
பண மதிப்பு நீக்க நடவடிக்கை

இந்த நிலையில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான பணமதிப்பிழப்புக் கொள்கையின் நோக்கம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். அப்போது ஜெய்தீப் குப்தா, `பொருளாதாரக் கொள்கை முடிவுகளுக்கு நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியாது' எனக் கூறினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதையடுத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, ``பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முடிவுக்குள் நீதிமன்றம் நுழையாது. ஆனால், அத்தகைய முடிவு எடுக்கப்பட்ட விதத்தை ஆய்வு செய்யலாம். அதேபோல் இது பொருளாதாரக் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றத்தால் கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார முடியாது" என்று தெளிவுபடுத்தினார். மேலும் இந்த விசாரணையில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, ``பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பொருளாதாரக் கொள்கை சமூகக் கொள்கையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.