Published:Updated:

`ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம்

ஜி.எஸ்.டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்குச் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

`ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜி.எஸ்.டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்குச் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு நிறுவனம் ஜி.எஸ்.டி-ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ``ஜி.எஸ்.டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர... மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதல்ல'' என்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கு எதிராக ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜிஎஸ்டி | GST
ஜிஎஸ்டி | GST

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``இந்தியாவில் ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. இந்தியா கூட்டாட்சித் தத்துவ நாடு என்பதால் ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு.

ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுரைகள், பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், `இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்’ என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது. ஜி.எஸ்.டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்குச் சம உரிமை உண்டு. ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால், அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism