அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுக்க, சிசிடிவி கேமராக்கள் பொறுத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்தப் பொதுநல மனுவில், பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துச் சான்றிதழ்களும் பெற லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கிறது. இதனால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுப்பதை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ` எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்துக்காக மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதனால், மனுதாரர் கே.கே.ரமேஷ் என்பவருக்கு ரூ.10,000 அபராதமும், இரண்டு ஆண்டுகள் வழக்குகள் தொடரவும் தடைவிதிக்கிறோம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.
