Published:Updated:

காணொலி வழக்கு விசாரணையில் பெண்ணிடம் அநாகரிகம் - வழக்கறிஞருக்குச் சிறைத் தண்டனை!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வழக்கு விசாரணையின்போது பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்குச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

காணொலி வழக்கு விசாரணையில் பெண்ணிடம் அநாகரிகம் - வழக்கறிஞருக்குச் சிறைத் தண்டனை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வழக்கு விசாரணையின்போது பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்குச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா பேரிடர் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றுவந்தது. அந்தச் சமயத்தில், நீதிபதி ஒருவர் காணொலி மூலமாக விசாரணை செய்துகொண்டிருந்தார். அப்போது விசாரணைக்குக் காத்திருந்த வழக்கறிஞர் ஒருவர் அங்கிருந்த பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்காக விசாரணை செய்தது. அந்த வீடியோ இணையத்தில் பரவாமல் தடுக்கவும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து அறிக்கை தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி-க்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், பின்வரும் காலங்களில் இது போன்ற தவறு நடக்காமலிருக்க பார் கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதிபதியின் உத்தரவையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பார் கவுன்சில் சார்பில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அந்த வழக்கறிஞர் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகக் கூடாது என்றும், வழக்கறிஞராகப் பணியாற்றக் கூடாது என்றும் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி பிரகாஷ், நீதிபதி நக்கீரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அந்த வீடியோ சென்னை உயர் நீதிமன்ற வட்டாரத்தில் மட்டும்தான் பரவிவருவதாகத் தகவல் தெரிவித்தனர். வீடியோவைப் பரவாமல் தடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism