Published:Updated:

கொரோனா: `புதுச்சேரியில் முழு ஊரடங்கு’ - மத்திய, மாநில அரசுகளுக்குக் கெடு விதித்த நீதிமன்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு

`கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையில் மத்திய, மாநில அரசுகள் ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18,084-ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 12,967 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 4,770 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347-ஐ தொட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில் புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், `கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்படும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகளும், அடிப்படைக் கட்டமைப்புகளும் இல்லை. இந்திய அளவில் புதுச்சேரியில் தொற்று அதிகமாகப் பரவுவதாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர், அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு உத்தரவை செயல்படுத்துவதுடன், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒருங்கிணைந்த கொரோனா தடுப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 வழங்குவதுடன், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் வழங்க வேண்டும். கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

புதுச்சேரி:`கொரோனா நெகட்டிவ்... ஆனா, தப்பு நடந்துபோச்சு’ - அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவமனை

இந்த வழக்கு நேற்று 8-ம் தேதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புதுச்சேரியில் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், அதை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களான மத்திய உள்துறைச் செயலர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், வருவாய்துறைச் செயலர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள், மாஹே, ஏனாம் பிராந்தியங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஆறு வாரத்துக்குள் எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு