Published:Updated:

`அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடும், ஊக்க மதிப்பெண்ணும் சரியானதே' - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து, 50% இடஒதுக்கீடும், ஊக்க மதிப்பெண்ணும் சரியானவையே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடும், ஊக்க மதிப்பெண்ணும் சரியானதே' - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து, 50% இடஒதுக்கீடும், ஊக்க மதிப்பெண்ணும் சரியானவையே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் மொத்தமுள்ள 1,968 முதுகலை மருத்துவப் படிப்பு இடங்களில், கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடும், 30 சதவிகித ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படுவதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சாரா மருத்துவர்கள் சங்கம், `முதுகலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவிகித ஊக்க மதிப்பெண்ணால், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான முதுகலை மருத்துவப் படிப்பு வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, முதுகலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு ஏதாவது ஒரு சலுகை மட்டும் வழங்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள்

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், முதுகலை மருத்துவப் படிப்பின் பொதுப்பிரிவிலும் அரசு மருத்துவர்கள் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் மேல்முறையீடு செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள்கொண்ட அமர்வு, ``உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுப்படி முதுகலை மருத்துவப் படிப்பில் கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவிகித ஊக்க மதிப்பெண் வழங்குவது சரியானவையே" என்று கூறி, அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism