Published:Updated:

`வனப்பகுதி வனவிலங்குகளுக்கு மட்டும்தான்!'- வெள்ளியங்கிரி மலை தீபம் வழக்கில் நீதிபதிகள்

வெள்ளியங்கிரி

``பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும்தானே தவிர மனிதர்களுக்கு கிடையாது'' என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published:Updated:

`வனப்பகுதி வனவிலங்குகளுக்கு மட்டும்தான்!'- வெள்ளியங்கிரி மலை தீபம் வழக்கில் நீதிபதிகள்

``பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும்தானே தவிர மனிதர்களுக்கு கிடையாது'' என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி

கோவை மாவட்டம், பேரூர் தாலுகா போளுவாம்பட்டி காப்புக்காடு பகுதியில் வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு வனத்துறையின் அனுமதியை மீறி, கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், வனவிலங்குகளுக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, வெள்ளியங்கிரியில் தீபம் ஏற்றுவதற்கு வனத்துறை தடை விதித்தது.

இந்தநிலையில் வெள்ளியங்கிரியில், டிசம்பர் 10 முதல் 12 வரை மகா தீபம் ஏற்றவும் பூஜை செய்யவும் அனுமதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் என்ற பக்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அந்த மனுவில், கார்த்திகை தீபத்தையொட்டி பக்தர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளாக பக்தர்களை அழைத்துச் சென்று வருவதாகக் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு, ` பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும்தானே தவிர மனிதர்களுக்கு கிடையாது' என்று கருத்து தெரிவித்தனர்.

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

இதையடுத்து, தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.