Published:Updated:

குட்கா விற்பனை: `பறவைகளுக்கு உணவு; காவல் நிலையத்தில் தூய்மைப் பணி! - நூதன தண்டனை விதித்த நீதிமன்றம்

பறவைகளுக்கு உணவளிக்கும்விதமாக மரத்தில் மண்சட்டிகளைத் தொங்கவிட்டு, அதில் உணவும் நீரும் வைத்து கவனித்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் பராக், குட்கா போன்ற பொருள்களை விற்பனை செய்தவர்களுக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனையை வழங்கியதோடு, அவர்களுக்குக் கடுமையான அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.

கம்பீரமான திருச்சி மலைக்கோட்டை
கம்பீரமான திருச்சி மலைக்கோட்டை

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டு சென்று காண்பித்தார் ஸ்டாலின். ``கமிஷன் வாங்கிக்கொண்டு, அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டியிருக்கலாம். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது” என்று அ.தி.மு.க அரசின் அவலத்தைச் சுட்டிக்காட்டி பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார்.

ஆனால் இன்று திமுக ஆட்சியில் அமர்ந்தும், குட்கா விவகாரம் படுஜோராக நடந்துகொண்டிருப்பதாக ஜூனியர் விகடனில் அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளிவந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எந்தக் கடையில் குட்கா விற்கப்படுகிறதோ, அந்தக் கடையை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும்.

குட்கா
குட்கா

தமிழ்நாட்டில் குட்கா இல்லை என்கிற நிலையை ஓரிரு மாதங்களில் உருவாக்கியே தீருவோம்" என உத்தரவாதம் அளித்தார். அதன் பிறகு, தமிழ்நாடு முழுவதும் போலீஸார் தீவிர குட்கா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போதைப்பொருள்கள் பரவலைத் தடுத்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`’இனி மது குடிக்க மாட்டோம்’ ;  உறுதியளித்தால் ஜாமீன்!' - கவனம் ஈர்த்த உயர் நீதிமன்ற உத்தரவு

இந்தநிலையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிகளில் குட்கா விற்பனை படுஜோராக நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் திருவெறும்பூர் பகுதியில் அதிரடி ஆய்வை மேற்கொண்டார்கள்.

குட்கா ஆதாரத்தைக் காட்டும் ஸ்டாலின்
குட்கா ஆதாரத்தைக் காட்டும் ஸ்டாலின்

அப்போது, ரவிக்குமார் என்பவரின் டீக்கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 6,000 மதிப்புள்ள ஐந்து குட்கா பண்டல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல் காட்டூர் பகுதிகளிலும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அங்கு காளியம்மாள் என்பவருக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் சோதனை நடத்தியதில் 40,000 ரூபாய் மதிப்புள்ள 35 குட்கா பண்டல்களை போலீஸார் கைப்பற்றினர்.

ஆந்திரா: இழப்பீடு விவகாரத்தில் மெத்தனம்! - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்

மேலும் காளியம்மாள், ரவிக்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி, அவர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவித்ததோடு, `குட்கா போன்ற போதைப்பொருள்களை தமிழக அரசு தடைசெய்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? இதுவே கடைசியாக இருக்கட்டும்’ என்று கண்டித்திருக்கிறார். அதோடு, அவர்களுக்கு நூதன தண்டனைகளை வழங்கியிருக்கிறார்.

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

``இருவரும் 20 நாள்கள் தினந்தோறும் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் மரத்தில் தங்கியிருக்கும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்ற இரண்டு நிபந்தனைகளைக் கொடுத்து, அவர்களை ஜாமீனில் விடுவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் காவல் நிலைய வளாகத்தைச் சுத்தம் செய்தும், பறவைகளுக்கு உணவளிக்கும்விதமாக மரத்தில் மண் சட்டிகளைத் தொங்கவிட்டு அதில் உணவும் நீரும் வைத்து கவனித்தும் வருகின்றனர். நீதிபதியின் இந்தத் தீர்ப்பை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு