Published:Updated:

`இயற்கையாக மரணிக்கும் வரை சிறை!' - சிறுமி வன்கொடுமை வழக்கில் கோவை முதியவருக்குத் தண்டனை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு, இயற்கை முறையில் மரணிக்கும் வரையில் ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நீதிமன்றம்
கோவை நீதிமன்றம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் வசித்து வந்த கூலித் தொழிலாளி ஆறுச்சாமி (57). இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதால் ஆறுச்சாமி தனியாக வாழ்ந்து வந்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 12 வயதுச் சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் பணிக்குச் செல்வதால், தனியாக உள்ள சிறுமியை விளையாடலாம் என்றும், சமைத்துத் தருவதாகவும் ஆறுச்சாமி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்படி அழைத்து வரும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

`பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், 21 நாள்களில் தூக்கு!' - ஆந்திராவில் புதிய சட்டம்

தொடர்ந்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அந்தச் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்ததும் பெற்றோர்களுக்குத் தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, ஆறுச்சாமியைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஆறுச்சாமி குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது . அந்த ஆயுள் தண்டனை என்பது ஆறுச்சாமி இயற்கை முறையில் உயிரிழக்கும் வகையில் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை நீதிமன்றம்
கோவை நீதிமன்றம்

மேலும், ரூ.1,000 அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்குக் கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.