Published:Updated:

``ஊழல்வாதிகள்தான் நாட்டை அழிக்கிறார்கள்... பணத்தின் உதவியால் தப்பிக்கிறார்கள்!" - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

"உண்மையில் இந்த நாட்டை அழிப்பவர்கள் யார் தெரியுமா? ஊழல்வாதிகள்தான்." - உச்ச நீதிமன்றம்

``ஊழல்வாதிகள்தான் நாட்டை அழிக்கிறார்கள்... பணத்தின் உதவியால் தப்பிக்கிறார்கள்!" - உச்ச நீதிமன்றம்

"உண்மையில் இந்த நாட்டை அழிப்பவர்கள் யார் தெரியுமா? ஊழல்வாதிகள்தான்." - உச்ச நீதிமன்றம்

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி புனேவில் எல்கர் பரிஷத் கூட்டம் நடந்த மறுநாள், புனே பீமா-கோரேகானில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதில் எல்கர் பரிஷத்துக்கு உதவி செய்ததாகக் கூறிப் பல சமூக ஆர்வலர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2018-ம் ஆண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயதான பழங்குடியின உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமி.

ஸ்டேன் சுவாமி
ஸ்டேன் சுவாமி

இவர் மும்பையில் நீதிமன்றக் காவலின்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதே வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் சமூக ஆர்வலர் கௌதம் நவ்லகா. 70 வயதாகும் கௌதம் நவ்லகாவுக்கு போதிய மருத்துவ வசதி சிறையில் கிடைக்கவில்லை எனவும், அதனால் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிருஷிகேஷ் ராய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கவுதம் நவ்லகா
கவுதம் நவ்லகா
ட்விட்டர்

அப்போது என்.ஐ.ஏ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, ``கௌதம் நவ்லகா போன்றவர்கள் நாட்டை அழிக்க நினைக்கிறார்கள்" என வாதிட்டார். இதற்கு பதிலளிக்கும்விதமாக நீதிபதிகள், ``உண்மையில் இந்த நாட்டை அழிப்பவர்கள் யார் தெரியுமா... ஊழல்வாதிகள்தான். ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் என்ன நடக்கிறது தெரியுமா... ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யார்?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்பவர்களை விலைக்கு வாங்க, கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்ட வீடியோக்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களெல்லாம் இந்த நாட்டுக்கு எதிராக எதுவும் செய்யவில்லையா... ஊழல்வாதிகள், ஊழல் செய்த பண மூட்டைகளை வைத்துக்கொண்டு எளிதில் தப்பிவிடுகின்றனர்.

கௌதம் நவ்லகாவை வீட்டுக் காவலில் அனுப்பலாம் என நினைக்கிறோம். அதற்காக என்னென்ன கட்டுப்பாடுகளை என்.ஐ.ஏ விதிக்கும் என்பது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறி உத்தரவிட்டனர்.