Published:Updated:

சாலை மறியல் வழக்கு; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் - சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு!

ஜெயக்குமார்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டததற்காக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் அளித்திருந்த மனுவை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க-வினர் பலர், சென்னை ராயபுரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாகக் கூறி தி.மு.க பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒருவர் புகாரளித்ததன் பேரில் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க-வினர் 40 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த திங்களன்று கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினரால் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் ஜெயக்குமார் தொடுத்த ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மு.அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் சாலை மறியல்
மு.அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் சாலை மறியல்

அதைத்தொடர்ந்து, முன்னதாக ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க-வினர் பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக நேற்று மேலும் ஒரு வழக்கில் காவல்துறையினர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் மார்ச் 9 தேதி வரை ஜெயக்குமாரை சிறையிலடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டததற்காக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் அளித்திருந்த மனுவை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism