Published:Updated:

நுபுர் ஷர்மா: ``நீதிமன்றத்தின் கருத்துகள் நீதித்துறையின் எல்லையை மீறிய செயல்" - 117 பேர் கூட்டறிக்கை

நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

``நுபுர் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் துளியும் சம்பந்தமில்லாதவை." - 117 பேர் கூட்டறிக்கை

நுபுர் ஷர்மா: ``நீதிமன்றத்தின் கருத்துகள் நீதித்துறையின் எல்லையை மீறிய செயல்" - 117 பேர் கூட்டறிக்கை

``நுபுர் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் துளியும் சம்பந்தமில்லாதவை." - 117 பேர் கூட்டறிக்கை

Published:Updated:
நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு, இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனங்கள் வந்தன.

அதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக, அந்த நபரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலைசெய்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நுபுர் ஷர்மா விவகாரம்
நுபுர் ஷர்மா விவகாரம்

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், நுபுர் ஷர்மாவுக்குக் கண்டனம் தெரிவித்தது. அதில்.``மதம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய ஒரு நிலையில், ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன் மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இது போன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். இதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த இந்தக் கருத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ``நுபுர் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் துளியும் சம்பந்தமில்லாதவை. நீதிமன்றத்தின் இது போன்ற கருத்துகள் நீதித்துறையின் கண்ணியத்துக்கு எதிரானவை.

நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகள், நீதித்துறையின் எல்லையை மீறிய செயல். நாட்டில் நடக்கும் கொந்தளிப்புக்கு நுபுர் ஷர்மா மட்டுமே பொறுப்பு என்பதுபோல அமைந்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை. நீதித்துறையின் வரலாற்றில் இந்த கருத்துகள் அழிக்க முடியாத வடுவாகியிருக்கின்றன" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.