Published:Updated:

கடலூர்: கண்ணகி முருகேசன் ஆணவப் படுகொலை மேல் முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு - விவரம் என்ன?

கண்ணகி - முருகேசன் ( விகடன் )

கடலூர் மாவட்டம் கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கின் மேல் முறையீட்டில், சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

கடலூர்: கண்ணகி முருகேசன் ஆணவப் படுகொலை மேல் முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு - விவரம் என்ன?

கடலூர் மாவட்டம் கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கின் மேல் முறையீட்டில், சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

Published:Updated:
கண்ணகி - முருகேசன் ( விகடன் )

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இருக்கும் குப்பநத்தம் புதுக்காலனி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணுவின் மகன் முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை மாற்று சமூகத்தைச் சேர்ந்த துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஏற்பட்ட காதலால், கடந்த 2003-ம் ஆண்டு ரகசியமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

தீர்ப்பு
தீர்ப்பு

இது கண்ணகியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், அதே ஆண்டு இருவரின் கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் விஷம் கொடுத்து ஆணவப் படுகொலை செய்து தனித்தனியாக எரித்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய இந்த வழக்கில் 2021 செப்டம்பர் 24-ம் தேதி 12 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது கடலூர் சிறப்பு நீதிமன்றம். அதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பி.என்.பிரகாஷ் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றனர். அப்போது கொலைசெய்யப்பட்ட கண்ணகியின் அண்ணனும், வழக்கின் இரண்டாவது குற்றவாளியுமான மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 3, 13-வது குற்றவாளிகளான ரங்கசாமி, சின்னதுரை இருவரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்.

14-வது குற்றவாளியான காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் SC, ST Act 3 (2) (1), IPC 218 இரண்டு பிரிவுகளில் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், IPC 217 மற்றும் SC ST Act 4 (1) இரண்டு பிரிவுகளில் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்ற 9 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism