Published:Updated:

``கட்டாய மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால் கடினமான சூழல் உருவாகும்!" - அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

கட்டாய மதமாற்ற விவகாரம் - உச்ச நீதிமன்றம்

``இது மிகவும் தீவிரமான விஷயம். கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." - உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி பா.ஜ.க தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது. அந்த வரிசையில் மிரட்டல், ஏமாற்றுதல், பணம் என மோசடியான மத மாற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், `கட்டாய மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால் கடினமான சூழ்நிலை உருவாகும்' என்று கூறி, மத்திய அரசை நடவடிக்கை எடுக்க அறிவுருத்தியிருக்கிறது.

கட்டாய மதமாற்ற விவகாரம் - உச்ச நீதிமன்றம்
கட்டாய மதமாற்ற விவகாரம் - உச்ச நீதிமன்றம்

மேலும், இந்த மனுமீதான விசாரணையில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, ``இது மிகவும் தீவிரமான விஷயம். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும். இதில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதையும் கூறுங்கள்.

கட்டாய மதமாற்ற விவகாரம் - உச்ச நீதிமன்றம்
கட்டாய மதமாற்ற விவகாரம் - உச்ச நீதிமன்றம்

ஏனெனில் இது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மதச் சுதந்திரத்தைப் பாதிக்கும் தீவிரமான பிரச்னை. எனவே, இந்திய அரசு தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதும், இது போன்ற கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க மேலும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்தும் பதில் தாக்கல் செய்வது நல்லது" என்று மத்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் (Solicitor General of India) துஷார் மேத்தாவைக் கேட்டுக்கொண்டது.