Published:Updated:

``இந்தியாவின் கலாசாரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும்!" - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

``இந்தியாவிலிருக்கும்போது ஒவ்வொருவரும், இந்தியாவின் கலாசாரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும்." - உச்ச நீதிமன்றம்

``இந்தியாவின் கலாசாரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும்!" - உச்ச நீதிமன்றம்

``இந்தியாவிலிருக்கும்போது ஒவ்வொருவரும், இந்தியாவின் கலாசாரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும்." - உச்ச நீதிமன்றம்

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும்விதமாக தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். அதோடு, கட்டாய மதமாற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே, `கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்து பதில் தாக்கல் செய்வது நல்லது' என்று மத்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் (Solicitor General of India) துஷார் மேத்தாவிடம் கூறியிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் முன்பு ஆஜரான துஷார் மேத்தா, ``நாங்கள் மாநிலங்களிலிருந்து தகவல்களைச் சேகரிக்கிறோம். எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்" என நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதைத் தொடர்ந்து பேசிய நீதிமன்ற அமர்வு, ``இதை விரோதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... இது மிகவும் தீவிரமான பிரச்னை. மேலும் இறுதியாக நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இது. அதோடு இந்தியாவிலிருக்கும்போது ஒவ்வொருவரும், இந்தியாவின் கலாசாரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும்" எனக் கூறியது.