Published:Updated:

மனைவியைச் சுட்டுக்கொல்ல முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ! - 3 ஆண்டு தண்டனை கொடுத்த சிறப்பு நீதிமன்றம்

மனைவி ஹேமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அசோகன். வாக்குவாதம் முற்றி அடிதடி வரை சென்றுள்ளது.

அசோகன்
அசோகன்

திருவாரூர் தொகுதியின் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அசோகன். இவர் மீது கடந்த 4 வருடங்களாக நடைபெற்றுவந்த கொலை முயற்சி வழக்கில் இன்று அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

தீர்ப்பு
தீர்ப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அசோகன். இந்நிலையில் 2015 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 -ம் தேதி இரவில் மது போதையில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தாமதமாக வீட்டுக்கு வந்த மனைவி ஹேமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி அடிதடி வரை சென்றுள்ளது. இறுதியாக மனைவியையும் அவரது தாயையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

`3 நாள்; ஒரே ஒரு இட்லி; துப்பாக்கி மிரட்டல்!'- சென்னையில் சொத்துக்காக மாமியாரைக் கடத்திய மருமகள்

அவர்கள் வெளியேற மறுக்கவே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் இருமுறை சுட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோய் தாயுடன் வீட்டைவிட்டு வெளியேறிய ஹேமா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அசோகன் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது.

தீர்ப்பு
தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்.எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்புத் தேதியை ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் அசோகன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கிய நீதிமன்றம், அசோகனின் கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக அவரது தண்டனை நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.