Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: `முன்னாள் கலெக்டர், எஸ்.பி-யை விசாரணைக்கு அழைக்க முடிவு!' - வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு

கொடநாடு
கொடநாடு ( கே.அருண் )

கொடநாடு கொலை வழக்கில் நீலகிரியின் முன்னாள் கலெக்டர், எஸ்.பி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

இந்தச் செயலில் தொடர்புடையவர்களாக 10 பேரைக் கைதுசெய்தனர். இவர்களில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையிலும், மற்ற எட்டுப் பேர் ஜாமீனிலும் இருக்கிறார்கள். ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் சிறையிluள்ள சயான், வாளையார் மனோஜ் மற்றும் ஜாமீனிலுள்ள ஒருவர் உட்பட மூன்று பேர் ஆஜரானார்கள். மீதமுள்ள ஏழு பேர் ஆஜராகவில்லை.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

கொடநாடு பங்களாவில் பணிபுரிந்துவந்த லட்சுமியிடம் குறுக்கு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின் வழக்கை வரும் மார்ச் 2-ம் தேதிக்கு நீதிபதி அருணாசலம் ஒத்திவைத்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆனந்தன், மற்றும் விஜயன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ``கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிவந்த லட்சுமி என்பவர், தனது மகனை ஜெயலலிதா தத்தெடுப்பதாகவும், அதற்காகப் பணி உயர்வு அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இது புதிய தகவலாக இருக்கிறது. கொடநாடு வழக்கில் குறுக்கு விசாரணையின்போது பல்வேறு புதிய தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன‌.

கொடநாடு
கொடநாடு

கடந்த முறை சாட்சி விசாரணைக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மோகன்குமார், கொடநாட்டில் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று இரவு 2 மணிக்கே அப்போதைய கலெக்டர் மற்றும் அப்போதைய எஸ்.பி ஆகிய இருவரும் வந்துவிட்டனர் என சாட்சியம் அளித்திருக்கிறார். எனவே, முன்னாள் கலெக்டர் சங்கர், மற்றும் எஸ்.பி முரளி ரம்பா ஆகியோரை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு