Published:Updated:

டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும் திட்டம் ரத்து - உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

ரேஷன் பொருள்களை நேரடியாக வீட்டுக்கே வந்து விநியோகிக்கும் ரேஷன் திட்டத்தை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேஷன் விநியோகிக்கும் திட்டம் ரத்து - உயர் நீதிமன்றம்

ரேஷன் பொருள்களை நேரடியாக வீட்டுக்கே வந்து விநியோகிக்கும் ரேஷன் திட்டத்தை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் வாக்குறுதியாக ரேஷன் பொருள்களை நேரடியாக வீட்டுக்கே வந்து விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்த்து ரேஷன் டீலர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அந்த இரண்டு மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, `மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீட்டுக்கு வீடு கொண்டு போய் கொடுக்கலாம். ஆனால், மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியாது’ எனக் கூறி இந்தத் திட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism