Published:Updated:

தாமிரபரணியை, பொருநை ஆறு என தமிழில் மாற்ற வழக்கு..!

பொதிகை மலையில் தாமிரபரணி

சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, பொருநை ஆறு என அழைப்பது தொடர்பாக 12 வாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

Published:Updated:

தாமிரபரணியை, பொருநை ஆறு என தமிழில் மாற்ற வழக்கு..!

சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, பொருநை ஆறு என அழைப்பது தொடர்பாக 12 வாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

பொதிகை மலையில் தாமிரபரணி

பொதிகை மலையில் தோன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் வற்றாத ஆறான தாமிரபரணியை பொருநை ஆறு எனத் தமிழில் மாற்ற வேண்டுமென்று தாக்கலான வழக்கில், 12 வாரத்தில் பரிசீலிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம்.
மதுரை உயர் நீதிமன்றம்.
ஈ.ஜெ.நந்தகுமார்

தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதிநாதன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``பொதிகை மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாகச் சென்று மன்னார் வளைகுடாவில் தாமிரபரணி ஆறு கலக்கிறது. தாமிரபரணி என்பது வடமொழிப் பெயராகும். வற்றாத ஜீவ நதியான இதன் தமிழ்ப்பெயர் பொருநை ஆகும்.

திருவிளையாடல் புராணம், முக்கூடற்பள்ளு, பெரியபுராணம் என சங்கத் தமிழ் இலக்கியங்களில் தாமிரபரணி, பொருநை நதி என்றே அழைக்கப்படுகிறது. இதைப் பல்வேறு தமிழறிஞர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி 1011 -ல் பதிக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலும் பொருநை நதி என்றே உள்ளது. அதனால் தாமிரபரணியின் பெயரை பொருநை நதி என தமிழில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

தாமிரபரணி
தாமிரபரணி
எல்.ராஜேந்திரன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, "தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என்று பாரதியார் பாடியுள்ளார். 'பொருநையந் திருநதியின் இருகரையும் இருபூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே' என்ற பாட்டின் மூலம் பூஞ்சாலி வகை நெல்லை விளைவிக்க பொருநை நதி உதவியாக இருக்கிறது என்று பெருமை பாடப்பட்டுள்ளது.

இப்படி ஏராளமான பாடல்களில் தாமிரபரணியை பொருநை நதி என அழைத்துள்ளனர். அந்தவகையில் பொருநை அருங்காட்சியகம் திருநெல்வேலியில் அமைக்கப்படும் என முதல் அமைச்சர் அறிவித்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இம்மனுவை அரசு தரப்பில் பரிசீலிப்பார்கள் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

தாமிரபரணி
தாமிரபரணி

தாமிரபரணி என வடமொழியில் அழைக்கப்படும் பெயரை சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி பொருநை ஆறு என அழைப்பது தொடர்பாக 12 வாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.