Published:Updated:

தொடர் முயற்சி: இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றக் கிளை!

இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை

``மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் அவர் இந்தியக் குடிமகள்தான்" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

தொடர் முயற்சி: இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றக் கிளை!

``மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் அவர் இந்தியக் குடிமகள்தான்" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

Published:Updated:
இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை

இலங்கையில் உள்நாட்டுப் போர் விளிம்பில் இருந்த காலம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களால் பல குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குத் தஞ்சம் வந்தனர். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு தம்பதியர், ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர். அந்த முகாமிலேயே 21.04.1986 அன்று அவர்களுக்கு நளினி என்ற பெண் குழந்தை பிறந்தது.

ஈழத்தமிழர்கள்
ஈழத்தமிழர்கள்
கோப்புப் படம்

தற்போது திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் நளினிக்குத் திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால், இன்னும் அவர்கள் அகதிகளாக இருப்பதை எண்ணி வேதனையுற்று வந்தார் நளினி. வெளிநாடுகளுக்குச் சென்றால்தான் குடும்பத்துக்கு நல்ல ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்று 08.04.2021 அன்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், அவரின் நாட்டுரிமையில் சந்தேகம் எழுந்தாகக் கூறி நேரில் வந்து பார்க்கும்படி, பார்ஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து அழைப்பு வர அதிர்ந்துபோனார் நளினி. அதைத் தொடர்ந்து 21.07.2021 அன்று பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று தான் இந்தியாவில் பிறந்ததற்கான எல்லா ஆதாரங்களையும் காண்பித்து இந்திய குடியுரிமைச் சட்டம்,1955-ன் மூன்றாம் பிரிவில், 26.01.1950 அன்று முதல் 01.07.1987 முன்பு வரை இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை மேற்கோள்காட்டி எழுத்துபூர்வ ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

பாஸ்போர்ட் குடியுரிமை
பாஸ்போர்ட் குடியுரிமை

இதன் சட்டங்களை விரிவாகக் காண்பித்தும் தனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், தனக்கான வாழ்வுரிமை மற்றும் குடியுரிமையைப் பெற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி... தனக்கு எழுத்துபூர்வமாக இந்திய குடியுரிமைச் சான்றளிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார் நளினி.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இதனடிப்படையில் 12.08.2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், மேற்குறிப்பிட்ட சட்டங்களைச் சுட்டிக்காட்டி, ``மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் அவர் இந்தியக் குடிமகள்தான்" எனத் தீர்ப்பளித்து நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கு இலங்கை தமிழர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலுசேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.