Published:Updated:

`போலி ஆவணங்கள், முறைகேடாக தலைவர் பதவி?'- ஓ.ராஜாவுக்கு அதிர்ச்சியளித்த நீதிபதிகள்

O Raja
News
O Raja

தேனி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் பதவியில் நீடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

மதுரை ஒருங்கிணைந்த ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை எழுப்பியது. மேலும், ஓ.ராஜா, மதுரை ஆவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இவை ஒருபுறம் என்றால், போலியான ஆவணங்களை வைத்து முறைகேடாக ஆவின் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஓ.ராஜா என்றும், முறையாக தேர்தல் நடத்தி ஆவின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தேனி மாவட்டம் பி.சி.பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

O Raja
O Raja

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓ.ராஜா, மதுரை ஆவின் தலைவராக பதவியேற்றதிலிருந்து தொடர் சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், கடந்த மாதம், 17 இயக்குநர்களைக் கொண்ட மதுரை ஆவின் கூட்டுறவு சங்கமானது மதுரை, தேனி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்டபின் தேனி ஆவின் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். அண்ணன் துணைமுதல்வர், அண்ணன் மகன் எம்.பி. இப்படி தன்னைச் சுற்றிலும் அதிகார பலம் இருந்தும் மதுரை ஆவின் தலைவர் பதவியைத் தக்கவைக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த ஓ.ராஜாவிற்கு பேரிடியாக வந்து விழுந்தது இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு. அம்மாவாசி தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை செய்த நீதிபதிகள், ஓ.ராஜா மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாக குழு செயல்பட இடைக்கால தடை விதித்தனர். இச்சம்பவம் தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.