Published:Updated:

``இரு விரல் பரிசோதனை அறிவியலுக்கும், பாதிக்கப்பட்டவரின் கண்ணியத்துக்கும் எதிரானது” - உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

சட்டத்துக்கு முரணான இரு விரல் பரிசோதனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

``இரு விரல் பரிசோதனை அறிவியலுக்கும், பாதிக்கப்பட்டவரின் கண்ணியத்துக்கும் எதிரானது” - உயர் நீதிமன்றம்

சட்டத்துக்கு முரணான இரு விரல் பரிசோதனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published:Updated:
மதுரை உயர் நீதிமன்றம்

"பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை, அரசியல் சட்டத்துக்கு முரணானது, அறிவியலற்றது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது" என்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

போக்சோ
போக்சோ

16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்திக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஏழு வருட கடுங்காவல் தண்டனையும் ரூ 1,20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜீவ் காந்தி மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன்-சதீஷ் குமார் அடங்கிய அமர்வு, கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தும் ரூ 1,20,000 அபராதத்தை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

கூடவே இந்த உத்தரவில், ``பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு மருத்துவர்கள் இரு விரல் சோதனை நடத்துவது தற்போது வழக்கமாக உள்ளது. இந்தச் சோதனை குழந்தையின் கண்ணியத்தைக் கேலி செய்யும்விதமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு, இந்தச் சோதனை நடத்துவது அரசியல் சட்டத்துக்கு முரணானது. பல மாநில அரசுகள் இந்தச் சோதனை நடத்துவதை தடை செய்துள்ளன. உச்ச நீதிமன்றமும் தடைசெய்துள்ளது .

மேலும் இச்சோதனை என்பது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்படும் அறிவியலற்ற பரிசோதனை முறை. அரசியலமைப்புக்கு எதிரானது.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

இது பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை, உடல் மற்றும் மனநிலை, கண்ணியத்தை, உரிமையை மீறுகிறது.

எனவே, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவர்களால் நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை நடைமுறையை உடனடியாகத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism