Published:Updated:

`குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து' - உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்துசெய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:

`குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து' - உயர் நீதிமன்றம்

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்துசெய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து, உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டும்வந்தன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

குட்கா பொருள்கள்
குட்கா பொருள்கள்

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, ``உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில், புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை. மேலும், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில், புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்துவதையும், முறைப்படுத்துவதைப் பற்றியும்தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனால், புகையிலைப் பொருள்களுக்கு முழு தடைவிதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடைவிதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அவசரநிலை கருதி தற்காலிகமாகத் தடைசெய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து பிறப்பித்த உத்தரவை, இந்த நீதிமன்றம் ரத்துசெய்கிறது. மேலும், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்படுகின்றன" எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

இதன் மூலம், தமிழ்நாட்டில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டிருக்கிறது.