Published:Updated:

அயோத்தியா மண்டப விவகாரம்: ``தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும்!" - சென்னை உயர் நீதிமன்றம்

அயோத்யா மண்டபம்

சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

அயோத்தியா மண்டப விவகாரம்: ``தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும்!" - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

Published:Updated:
அயோத்யா மண்டபம்

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் கடந்த 1954-ம் ஆண்டு அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபமானது பொதுமக்களின் நன்கொடை மற்றும் காணிக்கைகள் மூலம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நிர்வாகத்தில் நிதி முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழுந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு இந்த மண்டபத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

அயோத்யா மண்டபம்
அயோத்யா மண்டபம்

அரசின் அந்த உத்தரவை எதிர்த்துக் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. நீண்ட வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணை, கடந்த மார்ச் மாதம் தனி நீதிபதி வேலுமணி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்று கூறி, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ராம் சமாஜ் அமைப்பினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேல் முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் எந்த இடைக்காலத் தடையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர். இந்த சூழலில்தான், அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தியது. மேலும், அரசு அதிகாரி ஒருவரை நியமனமும் செய்தது. அதையடுத்து, மீண்டும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ``எந்த காரணமும் இல்லாது வழக்கைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது" என்று கூறினார். மேலும், இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

தனி நீதிபதி பின்பற்றிய நடைமுறையும், அறநிலையத்துறை பின்பற்றிய நடைமுறையும் தவறானது என்று கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், அறநிலையத்துறை புதிய அதிகாரியை நியமித்து உரிய விசாரணை நடத்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கியது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism