Published:Updated:

குறிப்பிட்ட சமூகத்தினருக்கென தனி முடிதிருத்தும் நிலையம் உள்ளதா? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

புதுப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு முடி வெட்டுவதில்லை என செல்வம் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில், `குறிப்பிட்ட சமூகத்தினருக்கென முடிதிருத்தும் நிலையம் உள்ளதா?' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

குறிப்பிட்ட சமூகத்தினருக்கென தனி முடிதிருத்தும் நிலையம் உள்ளதா? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

புதுப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு முடி வெட்டுவதில்லை என செல்வம் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில், `குறிப்பிட்ட சமூகத்தினருக்கென முடிதிருத்தும் நிலையம் உள்ளதா?' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

Published:Updated:
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம், ``புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி என்ற கிராமத்தில் 600 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இதில் பெரும்பான்மையானோர் உயர் வகுப்பினர் என்று சொல்லிக்கொள்பவர்களும், 150 குடும்பத்தினர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு 3 முடிதிருத்தும் நிலையங்கள் மற்றும் ஒரு சலவைக் கடை உள்ளது. ஆனால் இங்குள்ள முடிதிருத்தும் கடைகளில் உள்ளவர்கள், பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட மறுக்கிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையங்களில் இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

முடிதிருத்தும் கடை
முடிதிருத்தும் கடை
சித்தரிப்புப் படம்

இந்த நிலையில், செல்வத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி, ``புதுப்பட்டி கிராமத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையங்களில் முடிவெட்டுவதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவது உண்மையெனில் இது மிகப்பெரிய பிரச்னை. குறிப்பிட்ட சமூகத்தினருக்கென தனி முடிதிருத்தும் நிலையம் உள்ளதா? ஏன் இதுபோன்ற பாகுபாடுகள்?" என கேள்வி எழுப்பி வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism