Published:Updated:

சேலம்: மனைவிக்கு ரூ. 2.18 லட்சம் ஜீவனாம்சத் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய கணவர்!

ராஜீ நேற்று காலை சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவை ஜீவனாம்சத் தொகை ரூ.2.18 லட்சத்தை செலுத்த வந்தார். அவர் நிலுவைத் தொகையை பத்து ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் மூட்டையாகக் கட்டிக்கொண்டு வந்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜீ, சாந்தி தம்பதி. ராஜீ தனியார் நிறுவனம் ஒன்றில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சாந்தி விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்தார்.

சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சாந்திக்கு மாதந்தோறும் ரூ. 3000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்தத் தொகையை ராஜீ சரியாகக் கொடுக்காததால் மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் சாந்தி மனுத்தாக்கல் செய்தார்.

சேலம்: மனைவிக்கு ரூ. 2.18 லட்சம் ஜீவனாம்சத் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய கணவர்!

மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2.18 லட்சத்தை ராஜீ உடனே கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து ராஜீ, நேற்று காலை சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவை ஜீவனாம்சம் தொகையைச் செலுத்த வந்தார். அவர் நிலுவைத் தொகையை பத்து ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் மூட்டையாக கட்டிக்கொண்டு, ரூ. 2.18 லட்சத்தை எடுத்து வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.