Published:Updated:

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: `10 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை’ -உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. சென்னை மாநகராட்சியின் ரூபாய் 464.02 கோடி ஒப்பந்தங்களும், கோவை மாநகராட்சியின் ரூபாய் 346.81 கோடி ஒப்பந்தங்களும் அவரின் பினாமி நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் ஆர்.எஸ். பாரதியும், அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெயராமன் வெங்கடேசும் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தி.மு.க சார்பில் ஆர்.எஸ். பாரதி, ``உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கைகாட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது, அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பலகோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

வெயிட்டாக கவனித்த வேலுமணி, தங்கமணி முதல் முதல்வர் ஸ்டாலின் அதிரடி வரை.... கழுகார் அப்டேட்ஸ்!

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்றுசுவர் அமைத்தல், குடிநீர்குழாய் பதித்தல் போன்றவை கே.சி.பி இன்ஜினியர்ஸ், எஸ்.பி பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்[பட்டிருக்கிறது.

தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே தான் எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தான் தலையிடுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

வேலுமணி
வேலுமணி

இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதி, ‛‛எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என்று தெரிவித்தார். இந்த வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு