Published:Updated:

சென்னை: தின்னர் ஊற்றி தீவைத்து மனைவியைக் கொன்ற கணவர் - ஆயுள் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்

நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியைக் கொலைசெய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

சென்னை: தின்னர் ஊற்றி தீவைத்து மனைவியைக் கொன்ற கணவர் - ஆயுள் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்

மனைவியைக் கொலைசெய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை கோட்டூர்புரம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (39). இவரின் மனைவி அனுராதா. 20.11.2017-ம் தேதி அனுராதாவுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயக்குமார், மனைவி அனுராதாவைத் தாக்கியதோடு, தின்னர் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அனுராதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த தகவலின்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து ஜெயகுமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 23.11.2017-ம் தேதி சிகிச்சை பலனின்றி அனுராதா உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

   தீர்ப்பு
தீர்ப்பு
ட்விட்டர்

இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிக்குளம் வளாகத்திலுள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கோட்டூர்புரம் போலீஸார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ததோடு, சாட்சிகளையும் ஆஜர்படுத்தினர். வழக்கு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். இரு தரப்பு வழக்கு விசாரணை நிறைவடைந்து 2.3.2023-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் எதிரி ஜெயகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு 20,000 ரூபாய் அபராமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கைச் சிறப்பாக புலனாய்வு செய்து எதிரிக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த கோட்டூர்புரம் போலீஸாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.