Published:Updated:

`சுதந்திரமடைந்து 75 ஆண்டாகியும் பெண் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்காதது ஏன்?' - உச்ச நீதிமன்றம்

``இந்திய தேர்தல் ஆணையத்தில் நியமனத்தில் பாலின பன்முகத்தன்மை என்பது, தேர்தல் ஆணையத்துக்குத் தலைமை தாங்க திறமையான மற்றும் சுதந்திரமான நபர்களைக் கொண்டிருப்பது போன்றே முக்கியமானது. பெண் ஆணையர்கள் நியமனம் அவசியமானது..."

`சுதந்திரமடைந்து 75 ஆண்டாகியும் பெண் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்காதது ஏன்?' - உச்ச நீதிமன்றம்

``இந்திய தேர்தல் ஆணையத்தில் நியமனத்தில் பாலின பன்முகத்தன்மை என்பது, தேர்தல் ஆணையத்துக்குத் தலைமை தாங்க திறமையான மற்றும் சுதந்திரமான நபர்களைக் கொண்டிருப்பது போன்றே முக்கியமானது. பெண் ஆணையர்கள் நியமனம் அவசியமானது..."

Published:Updated:

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும்கூட இதுவரை பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்காதது குறித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. பெண் ஆணையர்கள் நியமனம் அவசியமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

`இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனம் சுதந்திரமான முறையில் இருக்க வேண்டும்; அவர்களைத் தேர்வு செய்ய சுயாதீனமானக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை, கே.எம்.ஜோஸ்பே தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வியாழனன்று விசாரித்தது.

Election department of india
Election department of india
Vikatan

வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கு அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியது. `இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், ஒரு பெண் தலைமைத் தேர்தல் ஆணையரைக்கூட தேர்வு செய்ய முடியவில்லையா?' என்று கேட்ட நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதில் பின்பற்றப்பட்ட முறை அல்லது பின்பற்றப்பட்ட அளவுகோல்களை விளக்க முடியுமா எனவும் கேட்டனர்.

`இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் இல்லாதது கவலைக்குரியது. இந்திய தேர்தல் ஆணையத்தில் நியமனத்தில் பாலின பன்முகத்தன்மை என்பது, தேர்தல் ஆணையத்துக்குத் தலைமை தாங்க திறமையான மற்றும் சுதந்திரமான நபர்களைக் கொண்டிருப்பது போன்றே முக்கியமானது. பெண் ஆணையர்கள் நியமனம் அவசியமானது' என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

சமீபத்தில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற கொலிஜியம், நீதிபதிகளுக்குத் தெரிந்தவர்களையும், அவர்கள் முன் ஆஜராகும் நபர்களையும் நியமிக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு முறையை மத்திய அரசு விமர்சனம் செய்திருந்த நிலையில், பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.