Published:Updated:

நீட் தேர்வு: ஓ.எம்.ஆர் விடைத்தாள் முறைகேடு; தனி நீதிபதியே விசாரிப்பார் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம்

ஓ.எம்.ஆர் விடைத்தாள் முறைகேடு குறித்து தேசிய தேர்வு முகமை ஆணையம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதியே விசாரித்து முடிவெடுப்பார் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு: ஓ.எம்.ஆர் விடைத்தாள் முறைகேடு; தனி நீதிபதியே விசாரிப்பார் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓ.எம்.ஆர் விடைத்தாள் முறைகேடு குறித்து தேசிய தேர்வு முகமை ஆணையம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதியே விசாரித்து முடிவெடுப்பார் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வின் திருத்தப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாள் முடிவுகளை 2020, அக்டோபர் 5-ம் தேதியன்று தேசிய தேர்வு முகமை ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. அக்டோபர் 5 அன்று வெளியான நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் முடிவுகளில் 700-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக இணையதளத்தில் காட்டியதாகவும், பின்னர் அக்டோபர் 17-ம் தேதி 700-க்கு 248 மதிப்பெண்களைப் பெற்றதாக ஓ.எம்.ஆர் விடைத்தாள் வெளியிட்டதாகவும் கூறி கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் வெளியிடப்பட்ட 594 என்ற மதிப்பெண் புகைப்பட ஆவணங்களுடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தேசிய தேர்வு முகமை ஆணையம், மனோஜ் என்பவர் போலி ஓ.எம்.ஆர் விடைத்தாளை தாக்கல் செய்ததாகவும், இரண்டாவதாக வெளியிடப்பட்ட மதிப்பெண்ணே சரியானது என்றும் கூறியது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்த தேசிய தேர்வு முகமை ஆணையம், `ஓ.எம்.ஆர் விடைத்தாள் குறித்து மத்திய அரசே விசாரித்துவரும் நிலையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள்கொண்ட நீதிமன்ற அமர்வு, ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்த முறைகேடு வழக்கை தனி நீதிபதியே விசாரிப்பார் எனத் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், இந்த விசாரணையின் முடிவுகளையும் தனி நீதிபதியே எடுப்பார் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism