Published:Updated:

`சாதிப் பிரிவினையை அரசே ஊக்குவிக்கிறதா?’ - சடலம் இறக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதிகள் சரமாரி கேள்வி

Madas hc
Madas hc

`பட்டியலின மக்களுக்குத் தனி மயானத்தை அரசே அமைத்துக் கொடுப்பது சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பதுபோல் உள்ளது’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம், நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். குப்பன் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் மயானத்துக்கான பாதை மறிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர், குப்பனின் உடலை பாலத்தில் இருந்து கீழே இறக்கி மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது, சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் பட்டியலின மக்களுக்குத் தனி மயானம் அமைத்துள்ளதாக தாசில்தார் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

The Dead Body was Brought Down with the help of Rope
The Dead Body was Brought Down with the help of Rope

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், `தமிழகத்தில் பட்டியலின மக்களுக்குத் தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில் அவர்களுக்குத் தனி மயானத்தை அரசே அமைத்துக் கொடுப்பது சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பதுபோல் உள்ளது’ எனத் தெரிவித்தனர். `தெருக்களில் இருந்த சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு 'ஆதிதிராவிடர் நலப்பள்ளி' போன்ற பெயர்களை நீக்காதது ஏன்’ எனவும் கேள்வி எழுப்பினார்.

Vikatan

மேலும், குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 28-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு