Published:Updated:

தனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்? #DoubtOfCommonMan

ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று அவர்கள் அனுமதியின்றி, மறைந்திருந்து அவர்களை புகைப்படம் எடுத்தால், வாயுரிஸம் சட்டப்பிரிவின் கீழ் ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் குற்றவாளிக்கு வழங்கப்படும்.

Published:Updated:

தனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்? #DoubtOfCommonMan

ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று அவர்கள் அனுமதியின்றி, மறைந்திருந்து அவர்களை புகைப்படம் எடுத்தால், வாயுரிஸம் சட்டப்பிரிவின் கீழ் ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் குற்றவாளிக்கு வழங்கப்படும்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``தனிநபரின் அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படமோ அல்லது காணொளியோ எடுக்க அனுமதி உண்டா?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஷான் என்ற வாசகர்.
#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan

இந்தக் கேள்வியை வழக்கறிஞர் மும்தாஜ் சூர்யாவின் முன்வைத்தோம்.

விரிவாகப் பேசினார் அவர்.

``ஒருவரை புகைப்படமோ அல்லது காணொலியோ எடுக்கும் பட்சத்தில் அது அவருடைய தனி உரிமையை (Right to Privacy) பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும். ஆர்ட்டிகிள் 21-ன் படி, தனியுரிமையைப் பாதிக்கும் விதத்தில் புகைப்படமோ காணொலியோ எடுக்கப்பட்டால் அது சட்டப்படி குற்றம். மேலும், ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரைப் பின்தொடர்ந்து சென்று புகைப்படம் எடுப்பது, காணொலி எடுப்பதும் சட்டப்படி குற்றம். சிலர் ரகசிய கேமராக்கள் கொண்டும் புகைப்படம் எடுக்கின்றனர். அதுவும் இந்தச் சட்டத்தின் கீழ் அடங்கும். அவ்வாறு புகைப்படமோ, காணொலியோ எடுப்பவர் இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) 354 C பிரிவிலுள்ள Voyeurism என்ற சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர். நிர்பயா வழக்கிற்குப் பிறகு 2013-ம் ஆண்டு இந்த Voyeurism என்ற சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் அனுமதியின்றி, மறைந்திருந்து புகைப்படம் எடுத்தால், Voyeurism சட்டப் பிரிவின் கீழ் ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் குற்றவாளிக்கு வழங்கப்படும்.
CCTV
CCTV

மேலும் இதே தவறை மறுமுறை செய்தால் மூன்று ஆண்டுகளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்..." என்கிறார் அவர்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 E-யும் தனி உரிமை மீறலைக் குற்றம் என்கிறது. இதுகுறித்தும் விரிவாகப் பேசினார் மும்தாஜ் சூர்யா.

``ஒரு தனிநபரின் அனுமதியின்றி அவரை ஆபாசமாக  புகைப்படமோ அல்லது காணொலியோ எடுத்தல் குற்றம். அதைப் பகிர்தலும் தண்டனைக்குரியது. 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரெண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் இந்தச் சட்டத்தின் மூலம் தண்டனையாக விதிக்கப்படும்.

வழக்கறிஞர் மும்தாஜ் சூர்யா
வழக்கறிஞர் மும்தாஜ் சூர்யா

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (Information Technology Act, 2000) ஒருவரின் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தல், குழந்தைகளைப் புகைப்படம் எடுத்தல், பெண்களைத் தவறான முறையில் புகைப்படம் எடுத்தல், ஒருவரின் அனுமதியின்றி தகவல்களைப் பரிமாறுதல், எலக்ட்ரானிக் சாதனங்களின் முறைகேடுகள் பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கியது. ஒரு பொது இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றாலும் அங்கு முறையான அனுமதி பெற்ற பிறகுதான் செய்ய வேண்டும். அனுமதியின்றி பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காணொலிகளைப் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின்படி குற்றமாகும். தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவுகள் 67 லிருந்து 78 வரை இதுபற்றிப் பேசுகின்றன.

தொழில்நுட்பத்தின் மூலம் ஆக்கபூர்வமான வளர்ச்சியை ஏற்படுத்துதல் அவசியம். சிலர் தவறான காரியங்களுக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோல தவறாகச் செயல்படும் நபர்கள் மூலம் உங்களுக்குத் தொந்தரவு வந்தாலோ, உங்கள் நண்பர்களுக்குத் தொந்தரவு வந்தாலோ புகார் அளியுங்கள். நீதிமன்றங்களில் வழக்கு தொடருங்கள்" என்றார். 

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan