Published:Updated:

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் - நீதித்துறை கையாண்டது எப்படி?

தொழிலாளர்கள்
News
தொழிலாளர்கள் ( Representational image | AP )

புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

கொரோனா காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் துரிதமாக செயல்படவில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. மதன் லோகுர் போன்ற பல முன்னாள் நீதிபதிகளும் பிரசாந்த் பூஷண் போன்ற மூத்த வழக்கறிஞர்களும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் கையாண்ட விதத்தை கடுமையாகச் சாடியுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், ``அரசுதான் அவர்களுக்கு உணவளிக்கிறதே... நிதியுதவி வழங்க என்ன அவசியம்?” எனக்கூறி அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஊரடங்கு அமலுக்கு வந்து இரண்டு மாதங்களாகியும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வது தொடர்ந்தே வருகிறது. அது தொடர்பான வழக்கையும், ``தொழிலாளர்கள் புலம்பெயர்வதை எங்களால் எப்படித் தடுக்க முடியும். அரசாங்கம்தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அதே சமயம் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாகக் கவனிக்கத்தக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளன. எமர்ஜென்சி தொடங்கி பல்வேறு சமயங்களில் உச்சநீதிமன்றத்துடன் மாறுபட்டு உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னை உயர்நீதிமன்றம்:

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்பில், ``புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வதைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. ஊடகங்களில் வருகின்ற காட்சிகளைப் பார்த்தால் யாருக்கும் கண்ணீர் வராமல் இருக்காது. இது மனிதன் உருவாக்கிய பேரிடர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு சிறிது காலம் பொறுத்துப் பார்த்த தொழிலாளர்கள் குழந்தைகள், குடும்பத்துடன் நடைப்பயணமாகவே சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் புறக்கணிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்வது அவர்களின் சொந்த மாநிலம் மட்டுமல்லாது அவர்கள் வேலை செய்யும் மாநிலங்களின் பொறுப்பும் கூட” என்று கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
நகரங்களுக்கு வந்து பணி செய்து நம் வாழ்வை செளகரியமாக்கிய தொழிலாளர்கள் இன்று அசௌகரியத்தில் இருக்கிறார்கள்.
ஆந்திரா உயர்நீதிமன்றம்

ஆந்திரா உயர்நீதிமன்றம்:

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என அம்மாநில அரசுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பில், ``இந்தக் கட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றால் பாதிக்கப்படுப்பவர்களைப் பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து நீதிமன்றம் தவறிவிடும். நகரங்களுக்கு வந்து பணி செய்து நம் வாழ்வை சௌகரியமாக்கிய தொழிலாளர்கள் இன்று அசௌகரியத்தில் இருக்கிறார்கள். யாருடைய கருணையையும் எதிர்பார்க்காமல் அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளனர். அவர்களுடைய வலிகள் தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்நாடகா உயர்நீதிமன்றம்:

கர்நாடக மாநிலத்தில் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட புலம்பெயர் தொழிலாளர்கள் தேவை. எனவே, தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல அவசரப்பட வேண்டாம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட ஷர்மிக் சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாகவும் கர்நாடகா அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது எடியூரப்பா அரசு. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம், ``புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்ப தெளிவான கொள்கைகளை வகுத்து அதற்கு வேண்டியவற்றைச் செயல்படுத்த வேண்டும். மக்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் உண்டு” என்று கூறியுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றம்

குஜராத் உயர்நீதிமன்றம்:

கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்துள்ள மாநிலங்களுள் குஜராத்தும் ஒன்று. புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னையும் அங்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தங்கள் ஊர்களுக்குத் திருப்பியனுப்ப வேண்டும் என தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி பதிலளிக்க அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், ``மாநில அரசு சமூகத்தின் மிகவும் பின் தங்கிய வரிய பிரிவினரைக் கையாண்டு வருகிறது. அவர்களுக்கு கொரோனாவை விடவும் பசியால் இறந்துவிடுவோமா என்கிற அச்சம் உள்ளது. அவர்களின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாகிவிடக் கூடாது” என்று தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

கொரோனா நெருக்கடியின்போது நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் பேசிய முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், "உச்சநீதிமன்றம் அரசு சொல்வதைக் கேட்டு தொழிலாளர்கள் நலன் தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கக் கூடாது. உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்க முடியும். உச்சநீதிமன்றம் செய்திருக்க வேண்டியதை உயர்நீதிமன்றங்கள் செய்வது ஆறுதல் அளிப்பவையாக உள்ளன. முன்னர் சி.ஏ.ஏ சட்டத்தை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

ஊரடங்கின்போது மதுக்கடைகள் திறக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து வழக்கை தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி, வழக்கை மேற்கொண்டு விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அரசுகள் உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கும் சம்பவங்களும் உண்டு. அரசின் அனைத்துப் பிரிவுகளிலும் இருப்பதைப் போலத்தான் உச்சநீதிமன்றமும் தன்வசம் அதிகாரங்களை எடுத்துக்கொள்கின்ற போக்கு இந்த ஆட்சிக்கு முன்பிருந்தே நீண்ட காலமாக இருந்துவருகிறது. நீதித்துறை அதற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதே இதற்கு தீர்வாக அமையும்” என்றார்.